மாமன்னன் படத்தில் பன்றி குறியீடு பின்னணி… இசக்கிக்கு மாமன்னனுக்கு என்ன தொடர்பு…

0
Follow on Google News

தேவர் மகன் படத்தில் என் அப்பா இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் மாமன்னன் படம் . தேவர் மகனில் வந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படியிருக்கும் என்ற யோசனை. அந்த இசக்கி தான் இன்று மாமன்னன்” என்று மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் இயக்குனர் மாரிசெல்வராஜ் பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது மாமன்னன் படம் திரைக்கு வந்துள்ளது,இதில் எந்த இடத்திலும் மாரிசெல்வராஜ் பேசியது போன்று தேவர் மகன் படத்தில் வரும் இசக்கிக்கும், மாமன்னன் படத்தில் வரும் வடிவேலு கதாபாத்திரத்தையும் எந்த விதத்திலும் தொடர்பு படுத்த முடியாத அளவில் தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எதற்காக தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி தான் மாமன்னன் என மாரி செல்வராஜ் தெரிவித்து இருந்தார் என்கின்ற குழப்பம் நீடித்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசியலுக்கு வரும் ஒருவர் தனி தொகுதியில் சுமார் பத்து வருடங்களாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக மக்களின் பெரும் ஆதரவுடன் மக்கள் பணியாற்றி வருகிறார். அவரை சுற்றி நடக்கும் பிரச்சனை, அவர் சந்திக்க கூடிய பல்வேறு சூழ்ச்சிகள், மேலும் அவரை சுற்றி நடக்கக்கூடிய அரசியல் கொலைகள், என அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு ஒரு மாமன்னனாக வடிவேல் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளது.

மாமன்னன் படத்தில் அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் அந்த படக்குழுவினர்கள் சொன்னது போல் அந்த படத்தின் மாமன்னன் வடிவேல் தான் என்பது அந்த படத்தை பார்த்தபோது வெளிப்படுகிறது. இந்த நிலையில் மாமன்னன் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் டீசல் வெளியீட்டில் பன்னிக்குட்டிகளை குறியீடாக மாரி செல்வராஜ் வைத்திருந்தார்.

இது பலருக்கும் மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. பன்றி குட்டியை எதற்காக மாரிசெல்வராஜ் குறியீடாக வைத்துள்ளார் என்றும், மேலும் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் படம் வெளியாவதற்கு முன்பு வரவில்லை, இந்த நிலையில் படத்தில் பன்னிக்குட்டி குறியீடு எதற்கு என்பது பற்றி படம் பார்க்கையில், தென் மாவட்டங்களில் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்த அநீதியை சொல்வதற்கான குறியீடாக இந்த பன்றி குட்டியை மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் இடம்பெற வைத்துள்ளதை பார்க்க முடியுது.

அந்த வகையில் படத்தை பார்க்கின்றவர்களுக்கு நன்கு அறிவார்கள் இந்த பன்றி குட்டியின் குறியீடு எதற்காக மாரி செல்வராஜ் அந்த படத்தின் போஸ்டர் மற்றும் பல இடங்களில் வைத்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் பல உண்மை சம்பவங்களை போகிற போக்கில் மாரி செல்வராஜ் அந்த படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

இதில் ஒரு அரசியல் சார்ந்த சில முக்கிய புள்ளிகளின் கதைகளை கூட போகிற போக்கில் மாரி செல்வராஜ் காட்சியாக அம்பலப்படுத்தி உள்ளார். ஆனால் இது போன்ற காட்சிகளை எப்படி உதயநிதி மாரி செல்வராஜ்க்கு அனுமதித்தார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது, அதே நேரத்தில், படத்தை இயக்குவதற்கான முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் உதயநிதி என்பதை பார்க்க முடிகிறது.

மேலும் உதயநிதியின் தலையீடு சிறிதளவு கூட இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று, அந்த வகையில் மாரிசெல்வராஜ்க்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர் சொன்னதை மட்டும் நடித்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார் உதயநிதி என படம் பார்க்கின்றவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது