இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் சென்னையில் படமாக்கப்பட்டு அடுத்த கட்ட படபிடிப்புக்காக ஒட்டுமொத்த பட குழுவும் காஷ்மீர் சென்றுள்ளது. நடிகர்கள் மட்டுமின்றி சுமார் 500க்கு மேற்பட்டவர்கள் காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.
அவர்கள் அனைவருமே சென்னையிலிருந்து சென்றவர்கள். இந்த நிலையில் மிக மகிழ்ச்சியுடன் காஷ்மீருக்கு தனி விமானத்தில் சென்ற பட குழுவினர்,ல் அங்கே இறங்கிய பின்பு தான் கடும் குளிரில் குளிர் காரணமாக மிகப்பெரிய சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்த படத்தில் ஏழு வில்லன்கள் நடிக்க இருப்பதால் ஒவ்வொரு வில்லனையும் வரவழைத்து அவர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு திரும்ப அனுப்பி வைத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இருந்தும் கடும் குளிர் காரணமாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் இதற்கு காரணம் அதிகாலை கடும் குளிர் காலமாக கேமராவில் நினைத்தது போன்று காட்சிகள் படமாக்கப்படவில்லை, லியோ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய காட்சி படமாக்கப்பட்ட உடன் அடுத்து எப்போது எங்களுடைய காட்சி படமாக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்துங்கள் அதுவரை நாங்கள் சென்னையில் இருக்கிறோம் என்று குளிர் தாங்க முடியாமல் சென்னை திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருவதால் கடும் குளிருக்கு மத்தியில் காஷ்மீரிலேயே தங்கி தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் காஷ்மீரில் தொடங்கப்படுவதாக இருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருந்தால் தற்பொழுது இருக்கும் குளிரை விட அப்போது அதிகமாக இருந்திருக்கும் அந்த வகையில் நல்ல வேலை தப்பித்தோம் என பெருமூச்சு விடுகின்றனர் லியோ பட குழுவினர்.