இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கி சுமார் மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் விடுதலை. ஆரம்பத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் கதையில் சில மாற்றங்களை செய்து விஜய் சேதுபதியை என்ட்ரி கொடுக்க வைத்தார் வெற்றிமாறன்.
சுமார் மூன்று வருடங்கள் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் இப்படத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட அதிகம் செலவானதை தொடர்ந்து தயாரிப்பு தரப்பில் இருந்து வெற்றிமாறனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதற்கு விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகுகிறது என வெற்றிமாறன் விளக்கம் கொடுத்து தயாரிப்பு தரப்பை ஆஃப் செய்துள்ளார்.
மேலும் விடுதலை படத்தில் கமிட்டாகியுள்ள ஆர்டிஸ்ட்கள் எப்படா இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு நமக்கு விடுதலை கிடைக்கும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த படத்தில் பலமுறை கதைகளில் மாற்றம் செய்வது. இதற்கு முன்பு எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் புதிய காட்சிகளை எடுத்து, பின்பு அதுவும் திருப்தி இல்லை என்று, அதையும் நீக்கிவிட்டு மீண்டும் புதிய காட்சிகளை படமாக்கி வந்தார் வெற்றிமாறன்.
இந்த நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் நடந்த சில த்ரில்லரான சம்பவம் வெளியாகியுள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது, முதலில் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியிலும் அதன் பின்பு சிறுமலை பகுதிகளிலும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அடர்ந்த காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று இருந்ததால் அங்கே லைட் செட்டப் செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் லைட் மரத்தின் உயரத்தில் வைக்கப்படுவதற்கு, அந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களின் உதவியை நாடிய இயக்குனர் வெற்றிமாறன், அவர்களுக்கு ஒரு பெரும் சம்பளத்தை கொடுத்து அங்கே படப்பிடிப்பு நடத்தப்படும் பகுதியை சுற்றியுள்ள மரத்தின் உயரத்தில் லைட் அமைந்துள்ளனர். இப்படி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே பல நேரங்களில் மழை வந்து படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று மழை வந்துவிட்டது என்று கிளம்பி செல்லலாம் என்றால் , அங்கே சரியான பாதைகள் வசதி இல்லாததால் அவர்கள் வந்த வாகனங்கள் சேரில் மாட்டிக் கொண்டு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டு வந்துள்ளது. இப்படி பலமுறை வாகனங்கள் சேரில் மாட்டினாலும் பல தடவை சில தூரம் நடந்து சென்றே ஒரு புதிய லொகேஷனை தேர்வு செய்து அங்கே படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படி பல சிரமங்களுக்கு மத்தியில் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.