சிக்கிய தமிழ் ராக்கர்… தமிழ்சினிமாவுக்கு பல வருடமாக சவாலாக இருந்த தமிழ் ராக்கர்ஸ் சிக்கியது எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

பல ஆண்டுகளாக ஏழைகளின் நண்பராகவும், நடிகர்களின் எதிரியாகவும் இருந்தது இந்த தமிழ் ராக்கர்ஸ் தான். புதிதாக வெளியாகும் திரைப்படங்களை, தியேட்டரில் மட்டுமே சென்று பார்க்க முடியும் என்ற நிலையை மாற்றி, ஹாயாக வீட்டிலேயே டிக்கெட் எடுக்காமல், ஃப்ரீயாக பார்க்கலாம் என்ற நிலைக்கு ரசிகர்களை கொண்டு வந்ததும் இவர்கள்தான். 

தற்போதைய காலகட்டத்தில் காலை எழுவது முதல் இரவு மீண்டும் உறங்குவது வரையிலும், இணையதளத்திலேயே முடங்கி கிடக்கும் மனிதர்களை தங்களுக்கு சாதகமாக்கி, இந்த தமிழ் ராக்கர்ஸ் கும்பல் புதிதாக ஒரு படம் வெளியானால் அதை முதல் நாளிலேயே இணையத்தில் கசிய விட்டு திரையுலகிற்கு தொடர் தலைவலியையும் கொடுத்து வந்தனர்.

இவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமுமே தமிழ் ராக்கர்ஸ்க்கு எதிராக குரல் எழுப்பி வந்த நிலையில், சினிமா துறைக்கு தண்ணி காட்டி வந்த தமிழ் ராக்கர்ஸ்-ஐ ஒரு முன்னணி நடிகரின் உதவியால் போலீசார், கையும் களவுமாக எப்படி பிடித்தார்கள் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எந்த மொழி படங்களாக இருந்தாலும் அதை ரிலீஸ் செய்த முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், அதேபோல் நடிகர் பிரித்விராஜ் நடித்த, குருவாயூர் அம்பல நடையில் என்ற மலையாள திரைப்படமும் கடந்த மே மாதம் வெளியான  முதல் நாளிலேயே, தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகர் பிருத்வி ராஜ்ஜின் மனைவியுமான சுப்ரியா மேனன், கொச்சி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.  அந்த புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸின் அட்மின், தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தை தியேட்டரில் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்த போது போலீஸார் அவரை பிடித்து கைது செய்தனர். 

அது மட்டுமல்லாமல் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணயில் திரையரங்குகளின் இருக்கைகளில் சிறிய அளவிலான கேமராவை வைத்து முழு படத்தையும் ரெக்கார்டு செய்ததும் தெரியவந்தது. மேலும் இணையத்தில் படங்களை முதல் நாளிலேயே பதிவேற்றம் செய்ய ரூ 5000 கமிஷனாக ஸ்டீபன் ராஜ் பெற்றிருக்கிறார். 

கொச்சி சைபர் கிரைம் போலீசார் அந்த அட்மினை பிடிக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, முதலில் குருவாயூர் அம்பலநடை என்ற படம் எந்த தியேட்டரில் பதிவு செய்யப்பட்டது என ஆய்வு நடத்தினர். பின்னர் அந்த தியேட்டரில் உள்ள உட்புற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆறு பேர் கொண்ட குழுவினர் மொபைல் போனை சீட்டிற்கு அருகில் இருக்கும் ஹோல்டரில் வைத்து படத்தை பதிவு செய்திருக்கின்றனர். 

பின்பு, டிக்கெட் புக்கிங் ஆப் மூலம் அவர்களின் மொபைல் நம்பரும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நம்பரில் இருந்து மே 23, ஜூன் 17, ஜூன் 26, ஜூலை 5 ஆகிய தேதிகளில் டிக்கெட் புக்கிங் ஆகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை பிடிப்பதற்காக போலீசார் காத்திருந்த சூழ்நிலையில், ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட நம்பரில் இருந்து ராயன் படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஆகியிருந்தது. 

அதை வைத்து ஜெப ஸ்டீபன் ராஜை கைது செய்தனர். இவர் தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எது எப்படியோ கடைசியில் பிருத்விராஜின் மனைவியால் தமிழ் ராக்கர்ஸின் அட்டூழியம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது என திரைத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.