என் பெயரை பயன்படுத்த கூடாது… மகள் ஐஸ்வர்யாவை எச்சரித்த ரஜினி.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே கணவர் தனுஷ் நடிப்பில் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி தோல்வியை கண்டவர். இதன் பின்பு தந்தை நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்கு ஆசைப்பட்டு பலமுறை தந்தையை அணுகிய போது, ஏற்கனவே இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்ததில் ஏற்பட்ட நஷ்டம் போதாதா.? என்று மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா, மீண்டும் தந்தை ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்கு முயற்சி செய்தார், ஆனால் அதற்கான வாய்ப்பை ரஜினிகாந்த் தரவில்லை. இதனை தொடர்ந்து புதிய படத்திற்கான கதை மற்றும் ஸ்கிரிப்ட், என அனைத்தையும் தயார் செய்து விட்டு பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளார் ஐஸ்வர்யா.

எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் ஐஸ்வர்யா இயக்க இருக்கும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. இந்நிலையில் தந்தை ரஜினிகாந்திடம், தான் இயக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கெஸ்ட் ரோலாக சில நிமிடங்கள் நடித்தால் கூட போதும் என்று ஐஸ்வர்யா அடம் பிடிக்க, ஒரு வழியாக அதற்கு ஒப்புக்கொண்டார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் கெஸ்ட் ரோலாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா இயக்கத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலாக வரும் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற இருக்கிறது. அதாவது குசேலன் படத்தில் ரஜினிகாந்தின் இடம் பெற்றது போன்று ஐஸ்வர்யா இயக்கும் படத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குசேலன் படத்தின் போது அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இது என்னுடைய படம் என்று விளம்பரம் செய்து ரசிகர்களை ஏமாற்ற கூடாது, இதில் நான் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே வருகிறேன் என்பதை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று ரஜினிகாந்து தெரிவித்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் அதை பொருட்படுத்தாமல் இது ரஜினிகாந்தின் படம் என்பது போல் விளம்பரம் செய்தனர்.

இறுதியில் குசேலன் படம் படுதோல்வி அடைந்த பின்பு இந்த படத்தின் விநியோகஸ்தர்கள் அனைவரும் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு குவிந்து நஷ்ட தொகையை திருப்பி கேட்டனர். இது ரஜினிகாந்த்க்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுத்தியது, அந்த வகையில் மகள் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலாக நடிக்க இருப்பதால், மகளிடம் இது எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த படத்தின் விளம்பரம் மற்றும் வியாபாரத்தின் போது என்னுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது. இல்லையென்றால் குசேலன் படத்தில் ஏற்பட்டது போல் எனக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுத்தி விடும் என்று மகள் ஐஸ்வர்யாவை கடுமையாக எச்சரித்துள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.