தள்ளாடிய ரஜினிகாந்தை தூக்கி அழைத்து சென்ற ஸ்ரீப்ரியா.! மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஜினிகாந்த்.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த சில கருப்பு பக்கங்கள் பல வருடம் கடந்து தற்போது வெளிவர தொடங்கியுள்ளது, பல சோதனைகளை சந்தித்து தான் ரஜினிகாந்த் சினிமாவில் வெற்றி பெற்றிருந்தாலும் ரஜினிகாந்த் குறித்து வெளியில் வெளிவராத பல தகவல்களை பிரபல நடிகர் ஒருவர் தொலைக்காட்சி பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார், அதில் 1979 காலகட்டத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் கூட ரஜினிகாந்த் படத்துடன் போட்டி போட முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறிய அவர்.

அப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த ரஜினிகாந்த் ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்வர் என்றும், அதனால் தனது உடல் சோர்வு அடைந்து விடக்கூடாது என்பதற்க்காக 120 பீடா சாப்பிடுவது வழக்கம், இந்த பீடா ஒரு வகையில் போதை தரக்கூடிய பீடா என குறிப்பிட்ட அந்த சினிமா பிரபலம், கோடம்பாக்கத்தில் உள்ள பீடா கடைக்கு தனது பியட் காரில் சென்று அவரே வாங்கி பீடா சாப்பிடுவர் என தெரிவித்தார்.

இதனால் உடல் பலவீனமாகி ஆங்காங்கே பல இடங்களில் தடுமாறி விழுவது, மேலும் கோவம் கொள்வது, எளிதில் மற்றவர்களிடம் சண்டையிடுவது போன்ற செயல்களில் ரஜினிகாந்த் ஈடுபட்டதாகவும், ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் ரஜினிகாந்த் பற்றி தவறுதலாக செய்தி வெளியிட்டதற்காக தனது காரில் வேகமாக வந்து அந்த பத்திரிகையாளர் முன்பு பிரேக் அடித்துள்ளார் ரஜினிகாந்த், இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்ரை கொலை செய்ய ரஜினிகாந்த் முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த பிரபல நடிகர்.

ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் கீழே தடுமாறி விழுந்த போது இரண்டு மூன்று முறை அவரை தூக்கி தனது வீட்டுக்கு அழைத்து சென்ற நடிகை ஸ்ரீப்ரியா அறிவுரை வழங்கியதாகவும் ஆனால் ரஜினிகாந்த் கேட்காததால், அவரை இயக்குனர் பலசந்தரிடம் அழைந்து சென்று பின் பாலசந்தர் அறிவுரை வழங்கி, நடிகர் ரஜினிகாந்தை மனநல மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை வழங்க பட்டதாக தெரிவித்தவர், மேலும் அவர் மருத்துவமனையில் இருந்த போது இனி ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்கமாட்டார் என பலர் பேசியதாக தெரிவித்த அந்த பிரபல நடிகர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்தபோதே அவர் நடித்த தர்மயுத்தம் படம் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்று, அதன் பின்பு பில்லா போன்ற பல வெற்றி படங்களில் நடித்து சினிமாவில் தொடர்ந்து வெற்றி நடைபோட்டதாக கூறிய அவர், ரஜினிகாந்த் அழகான ஒரு நடிகையை திருமணம் செய்ய ஆசை பட்டர், ஆனால் அது நிறைவேறாததால் அதே பெயர் கொண்ட ஒரு கல்லூரி பெண் அவரை பேட்டி எடுக்க வந்த போது என்னை திருமணம் செய்ய சம்மதமா என கேட்டு லதாவை காதலித்து ரஜினிகாந்த் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார்.