போயஸ் கார்டன் வீடு யாருக்கு.? ரஜினி மகள்களுக்கு இடையே நடந்த உச்சகட்ட சொத்து தகராறு… இறுதியில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் உச்ச நடிகராக இருக்கும் போது தன்னை பேட்டியெடுக்க வந்த லதா என்கிற கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்தார், ரஜினிகாந்த் – லதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு பெண் பிள்ளைகளில், மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்தார் இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றன, இளைய மகள் சௌந்தர்யாவுக்கு வீட்டில் பெரியோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா விவாகரத்து பெற்றார்.

இதனை தொடர்ந்து தனது மகன் உடன் தனியாக வாழ்ந்து வந்த சௌந்தர்யா, சினிமா நடிகர் விசாகனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்துக்கு பின்பு அவருக்கு வரும் சம்பளத்தில் இரண்டு மகள்களும் பங்கு போட்டு வருகின்றனர். கபாலி படத்தின் வருமானம் இளைய மகள் சௌதர்யாவுக்கு என்றால் அடுத்து ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தின் வருமானம் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு என இவர்கள் பங்கு போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மகள்களுக்கும் தனி தனியாக வீடு இருந்தாலும், ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீடு யாருக்கு என இரண்டு மகள்களுக்கு இடையில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளதாக கூறபடுகிறது, ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீடு இளைய மகள் சௌதர்யாவுக்கு என முடிவு செய்த போது பேச்சுவார்த்தை வாக்கு வாதமாக மாறியுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நான் மூத்த மகள் எனக்கு தான் அப்பா- அம்மா இருக்கும் வீடு என ஆடம் பிடித்தனர், ஆனால் ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதியினருக்கு இளைய மகள் சௌந்தர்யா மீது அதிக பாசம் என கூறபடுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை சமாதனம் செய்யும் முயற்சியில் இறங்கிய ரஜினிகாந்த் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதில் தற்போது ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீடு இளைய மகள் சௌதர்யாவுக்கு என்றும், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீடு இருக்கும் அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி கொடுக்கபடும் என்று சுமுகமாக பேசி சரி செய்துள்ளனர், அதன் படி தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சுமார் 150 கோடி செலவில் பிரமாண்ட வீடு ஓன்று போயஸ் கார்டனில் கட்டி முடிக்கு தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.