ரஜினி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சண்டையிட்ட கனல்கண்ணன்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் கடவுளை வணங்குபவன் முட்டாள் என்கின்ற வாசகம் அடங்கிய ஒரு சிலை உள்ளது. அந்த சிலை உடைக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என கனல்கண்ணன் பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் கனல் கண்ணன் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கனல்கண்ணன் கைது செய்யப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தலைமறைவாக உள்ள கனல்கண்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி, முன் ஜாமின் மனு கேட்டு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், கனல்கண்ணன் குறித்த ஒரு பரபரப்பான சம்பவம் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த கனல்கண்ணன் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக நுழைந்து, ஒரு காலகட்டத்தில் அனைத்து முன்னணி நடிகரின் படங்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.

இன்று தமிழ், தெலுங்கு என இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பெரும்பாலானோர் கனல்கண்ணனிடம் சீடர்களாக இருந்தவர்கள். எப்போதும் நெற்றியில் திருநீர் பட்டையுடன் ஆன்மீகத் தோற்றத்துடன் தோன்றும் கனல்கண்ணன், தன்னுடைய சொந்த ஏற்பாட்டில் சென்னையில் சுடலைமான் கோவில் ஒன்று கட்டியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை அறிந்த கனல் கண்ணன் நேரடியாக போயஸ் கார்டன் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு அதிரடியாக சென்று, அங்கே ரஜினிகாந்திடம் சரமாரியாக கேள்வி கேட்டு சண்டையிட்டுள்ளார். எங்களிடம் என்ன குறைச்சல், எங்களால் முடியாததை, அப்படி என்ன அந்த வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர் செய்து விடுவார்.

அவர் என்ன செய்வாரோ அதை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் செய்து காண்பிக்கின்றோம். தமிழ்நாட்டில் ஸ்டாண்ட் மாஸ்டரே இல்லையா? என்று சரமாரியாக கேள்வி மேல் கேள்வி கேட்டு ரஜினிகாந்த உடன் சண்டையிட்டுள்ளார் கனல்கண்ணன். ஒரு கட்டத்தில் உனக்கு என்னதான்பா வேண்டும் என ரஜினிகாந்த் கேட்க. அதற்கு இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நான் பணியாற்ற வேண்டும் என கனல்கண்ணன் தெரிவிக்க,

உடனே முத்து படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசி வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டருக்கு பதில் கனல்கண்ணனை முத்து படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்ய வைத்தார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் முத்து படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றியிருப்பார் கனல்கண்ணன்.

அன்புசெழியனிடம் ஐடி ரெய்டு….நேக்கா தப்பித்த தனுஷ் …. ரஜினிகாந்த் சிக்கியது எப்படி தெரியுமா.?