படப்பிடிப்பு நடந்த கிராம மக்களுக்கு நடந்த அதிசயம்.. ராகவ லாரன்ஸ்.. அந்த மனசு தான் சார் கடவுள்..

0
Follow on Google News

இளம் வயதிலிருந்து கடுமையான போராட்டத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் ஒரு டான்ஸராக, பின்பு டான்ஸ் மாஸ்டராக என்ட்ரி கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ், பின்பு நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ். தன்னுடைய அறக்கட்டளை மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிவார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ஜிகர்தண்டா 2 படத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள், இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்ற வருகிறது. இதில் பங்கேற்க படப்பிடிப்பிற்காக சுமார் 100 குதிரைகள் வரை பயன்படுத்தப்பட்டு வருவதால் அந்த குதிரையை பராமரிப்பதற்கு ஒரு மிகப்பெரிய செலவு செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த படத்தில் சுமார் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நடிக்கிறார்கள், சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்காக அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் அனைவருக்கும் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை வாங்கி கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ. கொடைக்கானலில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் அந்தப் பகுதியைச் சார்ந்த மேரி என்கின்ற ஒரு வயதான ஒரு பாட்டி சில காட்சிகளில் நடித்து வந்துள்ளார்.

அந்த பாட்டிக்கு கண் பார்வை இல்லை என்பதை புரிந்து கொண்ட ராகவா லாரன்ஸ். அந்த பாட்டிக்கு சிகிச்சைக்கான பணத்தையும் கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் கொடைக்கானலில் தாண்டிக்குடி என்கின்ற ஒரு கிராமத்தில்தான் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் சுமார் 40 வீடுகள் மட்டுமே உள்ளன. அனைத்தும் குடிசை வீடுகளாக இருக்கின்றது.ஒரு அடர்ந்த காடு பகுதி க்குள் இந்த கிராமம் இருக்கின்றது.

இந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து ராகவ லவரன்ஸிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், இந்த குடிசை வீட்டிற்குள் மழை பெய்தால் குடியிருக்க முடியவில்லை. மேலும் அதிகப்படியான குளிர் ஏற்படும் பொழுது குடியிருப்பது மிக சிரமமாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு சமுதாயக்கூடம் இங்கே கட்டி கொடுத்தால் அனைவரும் அந்த சமுதாயக்கூடத்தில் மழைக்காலத்தில் மேலும் குளிர் அதிகமாக உள்ள காலத்தில் தங்கிக் கொள்வோம் என்று அந்த கிராம மக்கள் ராகவா லாரன்ஸ் இடம் உதவி கேட்டுள்ளனர்.

உடனே செய்து தருவதாக உறுதியளித்த ராகவ லவ்ரன்ஸ், அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியுள்ளார். இந்த நிலையில் பல வருடங்களாக இங்கே நாங்கள் குடியிருக்கிறோம் அரசாங்கமே எங்களை கண்டுகொள்ளாத நிலையில் கடவுள் போல் வந்து எங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள ராகவா லாரன்ஸ் ஒரு கடவுளாகவே பார்க்கின்றோம் என்கின்றனர் அந்த கிராம மக்கள்.