இந்தியன் தாத்தாவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்… செம்ம டென்ஷனில் வெளுத்து வாங்கிய இயக்குனர் சங்கர்…

0
Follow on Google News

இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து, இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12-ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் ஷங்கர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்ற வாசகத்துடன் 2019 ஆம் ஆண்டே, ஜனவரி 15ஆம் தேதி, இந்தியன் 2 படத்தின் போஸ்டரை தனது twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அப்போது கமல்ஹாசனும் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியையும் தொடங்கி அரசியல்வாதி ஆனதால், இந்தியன் 2 படத்திலும் அரசியல் காட்சிகள், அனல் பறக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல், லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனை, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து என இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே முடங்கியது. அதனை தொடர்ந்து பல போராட்டத்திற்கு பிறகு, இந்தியன்2 படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து, கடந்த 25ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலரையும் பட குழு வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த ட்ரெய்லர் வெளியானதுமே, ப்ளூ சட்டை மாறன், இந்தியன் தாத்தாவை விமர்சித்ததால், உடனே பொங்கி எழுந்த கமல்ஹாசனும், டைரக்டர் ஷங்கரும், ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விளாசியுள்ளனர்.

பொதுவாகவே, திரைப்பட ரிவ்யூவர் என சொல்லிக்கொண்டு, பல நாள் உழைத்து, பல கோடி செலவு செய்து எடுக்கும் திரைப்படங்களை, ஒரே வீடியோவில் படம் நல்லாவே இல்லை என சொல்லி முடித்து விடுபவர்தான் ப்ளூ சட்டை மாறன். இவருக்கு எதிராக ஒட்டுமொத்த திரைத்துறையுமே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பல நடிகர்களும், இயக்குனர்களும் இவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

குறிப்பாக, இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில், கடந்த மாதம் ரோமியோ என்ற படம் வெளியான போதும், ப்ளூ சட்டை மாறன் அந்த படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்திருந்தார். அதனால் கோபமான விஜய் ஆண்டனி, அன்பே சிவம் படத்தை போல் ரோமியோ படத்தையும் ஆக்கி விடாதீர்கள், இவர் பேச்சை கேட்காமல் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என சீறி எழுந்ததோடு, பாவம் ப்ளூ சட்டை, அவர் நல்ல விதமாக பேசினால் யூட்யூபில் வியூஸ் போகாது, அவரால் பிழைப்பு நடத்த முடியாது என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறார் எனவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இவ்வாறு போன மாதம் இந்த பஞ்சாயத்தை முடித்த கையோடு, ப்ளூ சட்டை மாறனுக்கு இந்த மாதம் அடுத்த பஞ்சாயத்தும் ரெடியாகிவிட்டது. இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் ரசிகர்கள் இந்த காலத்திற்கு ஏற்ற வகையில், படம் தாறுமாறாக உள்ளது என்றும், இந்தியன் தாத்தாவை சூப்பர் மேன் போல் ஷங்கர் சார் வடிவமைத்து இருக்கிறார் என்றும் கொண்டாடி வருகின்றனர்.

மறுபுறம் சிலர், இந்தியன் தாத்தாவை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் தான் ப்ளூ சட்டை மாறனும் இடம் பிடித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இது இந்தியன் தாத்தாவா, சிக்கன் ரைஸ் தாத்தாவா என, இந்தியன்2 போஸ்டரை போட்டு கலாய்த்ததோடு, 106 வயதில், இந்தியன் தாத்தாவால் எப்படி ஏரில் பறந்து பறந்து அடிக்க முடியும் என பங்கமாக ட்வீட் போட்டு கலாய்த்திருந்தார்.

இந்நிலையில் தான், இந்தியன் தாத்தாவின் வயது குறித்து, கமல்ஹாசனும், ஷங்கரும் தனித்தனியே விளக்கம் கொடுத்து ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கியுள்ளனர். முதலில் நடிகர் கமல்ஹாசன், 106 வயதில் ஒருவரால் இப்படி முரட்டுத்தனமாக சட்டை எல்லாம் கழட்டி, ஐ படத்தில் வரும் விக்ரம், Gym Boys-ஐ அடித்து பொளப்பது போல நடிக்க முடியுமா என்றா கேட்டீர்கள், 106 வயது என்ன, 120 வயதிலும் நான் நடிப்பேன் என கூறி, ப்ளூ சட்டை மாறனை ஒரே போடாக போட்டுள்ளார்.

அதேபோல் இயக்குனர் சங்கரும், சீனாவில் உள்ள தற்காப்பு கலை மாஸ்டரான, லூசி ஜியான் 120 வயதிலும் மார்ஷியல் Arts-ஐ Perform செய்துள்ளார். இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தாவை வர்மக்கலையின் தலைசிறந்த மாஸ்டராகவே காட்டப் போகிறோம், அதனால் 106 வயதிலும் சண்டை போட முடியும் என அதிரடியாக கூறியிருந்தார். இந்நிலையில் தான் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனுக்கு கமலும், சங்கரும் சுடசுட பதிலடி கொடுத்து, லெப்ட் ரைட் வாங்கியதை பலரும் பாராட்டியதோடு, இனிமேல் ப்ளூ சட்டை மாறன் இந்தியன்2 படத்தை பற்றி வாய் திறக்கவே மாட்டார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here