புதியதாக வெளிவரும் தமிழ் சினிமாக்களை கேலி கிண்டலாக விமர்சனம் செய்து அந்தந்த படத்தின் ரசிகர்களின் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகி வருகின்றவர் பபுளு சட்டை மாறன், படத்தில் கதை திரைக்கதை நடிப்பு போன்றவற்றை மட்டும் விமர்சனம் செய்யாமல் அந்தப் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து சினிமா துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றவர் ப்ளூ சட்டை மாறன்.
மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்ற படங்கள் கூட இவரின் விமர்சனத்தில் அந்தப் படம் மிகவும் மோசம் என்பது போல் தான் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் தற்பொழுது பார்த்திபன் இயக்கி நடித்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் படம் இரவின் நிழல், இந்த படத்தைப் பார்த்த முன்னணி நடிகர்கள் மற்றும் மூத்த இயக்குநர்கள் பலர் இயக்குனர் பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர்.
பெரும்பாலான திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ தான் கொடுத்துள்ளார்கள், ஆனால் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை வழக்கம்போல் அவருடைய பாணியில் கேலி கிண்டல் செய்து படம் மிக மோசம் என்பது போன்றும் மேலும் இயக்குனர் பார்த்திபனை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தார், இதற்கு பாண்டிச்சேரியில் ப்ளூ சட்டை மாறன் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
இது பார்த்திபன் ரசிகர்கள் தான் செய்துள்ளார்கள், இது போன்ற செயல்களை பார்த்திபன் கண்டிக்க வேண்டும் என்கின்ற விமர்சனமும் எழுந்தது இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் குறித்த சர்ச்சைக்கு பார்த்திபன் பேசியதாவது. இரவின் நிழல் படம் குறித்து பெரும்பாலான விமர்சகர்கள் நல்லவிதமாக விமர்சனம் செய்ததின் காரணமாகவும், பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பும் தான் இந்த படம் இன்று வெற்றி அடைந்துள்ளது.
ப்ளூ சட்டை மாறன் கொடும்பாவி எரித்தது என்னுடைய ரசிகர்கள் கிடையாது, எனக்கு அதுபோன்ற வெறித்தனமான ரசிகர்கள் இருந்திருந்தால்,பல கமர்சியல் படங்கள் கொடுத்து வெற்றியடைந்திருப்பேன். அந்த செயலில் ஈடுபட்டது ஒரு தயாரிப்பாளர், அவர் என்னுடைய நீண்ட நாள் நண்பர், இது குறித்து நான் அப்போதே அவரை தனியாக அழைத்து கண்டித்தேன், அதற்கு அவர் சொன்னார் இதற்கு முன்பு என்னுடைய படத்தை விமர்சனம் செய்ய 3 லட்சம் ரூபாய் ப்ளூ சட்டை மாறன் கேட்டார் என்றும்.
அதற்கு நான் தராததால் என்னுடைய படத்தை மிக கேவலமாக விமர்சனம் செய்தார், அதனால் ஏற்கனவே புளு சட்டை மாறன் மீது எனக்கு கோபம் இருந்தது, அதன் வெளிப்பாடு தான் இது என்று சொன்னார். மேலும் ப்ளூ சட்டை மாறன் இரவின் நிழல் படம் குறித்து கேலி கிண்டலாக விமர்சனம் செய்தது, இந்த படத்திற்கு ஒரு பின்னடைவு என்று கூட சொல்லலாம், இந்த படத்தை நான் ஓட வைப்பதற்காக ஒவ்வொரு திரையரங்காக சென்று கொண்டிருக்கிறேன்.
இந்த படத்தை வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக கடனுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன், இப்படி பல பிரச்சனைகளில் இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறேன், என்னுடைய வலியை சொல்லி மாறாது, வேறு ஒருவராக இருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என பார்த்திபன் உருக்கமாக பேசியுள்ளது கண்கலங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.