ஜெயிலர் படத்தின் சுட சுட விமர்சனம்… யாருக்கு ஏமாற்றம்..

0
Follow on Google News

ஓய்வு பெற்ற ஜெயிலர் அதிகாரியான நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் பேரன் என ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்தின் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார் , ஒரு சிலை கடத்தல் வழக்கில் தீவிர மாக இறங்கும் மகன், ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகிறார். மகன் என்ன ஆனார் என்று தெரியாமல் தவிக்கும் தந்தை ரஜினிகாந்த் தன்னுடைய மகனை தேடி அலைகிறார்.

மகன் காணாமல் போனது குறித்து காவல் துறையினரிடம் இருந்து முறையான எந்த ஒரு தகவலும் ரஜினிக்கு கிடைக்கவில்லை, ஒரு கட்டத்தில் தான் மகன் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தன் மகனை கொலை செய்தது யார் என்பதை தேடி கண்டுபிடித்து தரமான சம்பவம் செய்ய அதிரடியாக இறங்குகிறார்.

அதாவது பாட்ஷா படத்தில் மாணிக்கமாக இருந்த ரஜினி எப்படி பாட்ஷாவாக உருவெடுத்தாரோ.? அதேபோன்று மனைவி மகன் பேரன் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ரஜினி முத்துவேல் பாண்டியனாக மாறும்போது அவர் என்ன செய்கிறார் என்பதுதான் அந்த படத்தின் சுவாரசியம். எதிரிகளை பழிவாங்க ரஜினி இறங்கும்போது தன்னுடைய கூட்டாளியாக மோகன்லால், சுனில் சிவராஜ் குமார் போன்றவர்களை சேர்த்துக் கொள்கிறார்.

இவர்களெல்லாம் ரஜினிகாந்த் ஜெயிலராக இருந்தபோது மிகப்பெரிய ரவுடிகளாக இருந்த இவர்களை ஜெயிலில் திருத்தியவர் அங்கே ஜெயிலராக இருந்த நடிகர் ரஜினிகாந்த் என்பதால் அவர்கள் அனைவருக்கும் ரஜினி மீது மரியாதை உண்டு, அதனால் தன் மகனை கொலை செய்தவர்களை பழிவாங்க செல்லும்போது அவருடன் இவர்களெல்லாம் கூட்டாளியாக சேர்கிறார்கள்.

இந்நிலையில் ஜெயிலர் படம் தொடக்கத்தில் அதிகமான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்களே.? அவர்களுக்கெல்லாம் இந்த படத்தில் அப்படி என்ன கதாபாத்திரம் இருந்து விடப் போகிறது என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், முன்னணி நடிகர் அனைவருக்கும் பக்காவான கதாபாத்திரத்தை பொருத்தி கச்சிதமான காட்சிகளை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்தே ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் நான் யானை அல்ல குதிரை விழுந்தவுடனே எழுந்து ஓடி விடுவேன் என்று நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது ஜெயிலர் படம். மேலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள இசை படம் முடிந்து வெளியே வருகின்றவர்கள் வாய்களில் முணுமுணுக்கும் வகையில் மிக அருமையாக இசை அமைத்துள்ளார் அனிருத்.

ஒரு சில இடங்களில் சில காமெடிகள் சலிப்பாக இருந்தாலும், அதே போன்று முதல் பாதி விறுவிறுப்பாக சென்று இரண்டாவது பாதியில் சில தோய்வு ஏற்படும் போது அனிருத் இசை இந்த படத்தை தூக்கிப் பிடிக்கிறது, ஜெயிலர் படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அது படம் பார்ப்பவர்களுக்கு பெரிதாக தெரியாத வகையில் மற்ற காட்சிகள் மக்கள் ரசிக்கும்படியாக எடுத்துளளார் நெல்சன்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கையில், 72 வயதானாலும், ஒரே சூப்பர் ஸ்டார் அது நான் தான் என பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினிக்கு அமைத்துள்ளது ஜெயிலர் படம், ஜெயிலர் மொத்தத்தில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைத்துள்ளது.