முதுகில் குத்திய தமிழ் சினிமா துறையினர்.. கும்பிடு போட்டு வெளியேறும் லைக்கா சுபாஷ்கரன்..

0
Follow on Google News

நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமா தற்பொழுது வியாபார நோக்கில் எடுக்கப்படுவதால் நல்ல கதைகளுக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் இடம் இல்லாமல் போனது. வியாபார நோக்கில் தமிழ் சினிமா நகர்ந்த பின்பு பலம்பெறும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், ஜெமினி, பிரசாத் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் சினிமா படம் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டனர்.

அந்த வகையில் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்கள் சினிமா தயாரிப்பதை விட்டு சென்ற பின்பு பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் தத்தளித்து வந்தனர். இந்தக் காலகட்டத்தில் தான் லைக்கா நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது. அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் சினிமாவையும் வாழ வைத்து, நம்மளும் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் சினிமா துறைக்கு வந்த லைக்கா சுபாஸ்கரனுக்கு துரோகங்கள் நிறைந்தது தமிழ் சினிமா என்பது தெரியவந்துள்ளது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் 2.0 படத்தை தயாரித்தது லைக்கா நிறுவனம். ஆனால் இந்த படத்திற்கான பட்ஜெட்டை மீறி அதிக பணம் விரயம் செய்யப்பட்டது. மேலும் படம் படுதோல்வியை சந்தித்து லைக்கா நிறுவனத்திற்கு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இதற்கு முக்கிய காரணமாக பின்னணியில் இருந்தவர் இயக்குனர் சங்கர் என்று கூறப்படுகிறது.

எந்திரன் 2 படப்பிடிப்பில் பிரம்மாண்டமான செட் அமைப்பதில் கமிஷன், தேவைக்கு அதிகமான துணை நடிகர்களை அழைத்து வருவது என்று, தனக்கு கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக பணத்தை அதிக விரயம் செய்து தனக்கான ஒரு பெரும் தொகையை ஆட்டைய போட்டுவிட்டார் இயக்குனர் சங்கர். ஆனால் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதே போன்று நடிகர் கமல்ஹாசன் கடனில் தத்தளித்த போது, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு பெருந்தொகையை லைக்கா நிறுவனம் சம்பளமாக கொடுத்தது. இந்த பணத்தின் மூலம் கமலஹாசன் விக்ரம் படத்தை தயாரித்து மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து தற்பொழுது மேலும் பல படங்களை தயாரித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து, பல வருடங்களாக அட்ரஸ் இல்லாமல் இருந்த மணிரத்தினத்திற்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தவர் லைக்கா சுபாஸ்கரன். ஆனால் கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் சேர்ந்து அடுத்த அவர்களின் ப்ரோஜெட்டை லைக்காவுக்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள். அதே போல் நடிகர் விஷால் பிரபல பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

உடனே விஷால் கடனை அடைத்து விட்டு அவருடன் சில ஒப்பந்தம் செய்தது லைக்கா. ஆனால் விஷால் ஒப்பந்தன்படி நடந்து கொள்ளாததால் விஷால் மீது வழக்கு தொடர்ந்து லைக்கா நிறுவனம். தமிழ் சினிமா துறையினர் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு லைக்கா சுபாஸ்கரனை பயன்படுத்திவிட்டு பின்பு கழட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நன்றி உணர்வு இல்லாத தமிழ் சினிமா துறையினரை நினைத்து மனம் வருந்திய சுபாஸ்கரன். தமிழ் சினிமாவில் படிப்படியாக அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதை குறைத்துவிட்டு, தெலுங்கு சினிமாவில் முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறார். அதற்காக பிரபல தெலுங்கு இயக்குனர்களிடம் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தினர் பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.