மணிரத்தினத்திற்கே நம்பிக்கை இல்லை… பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் பரிதாபம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி வெளிமாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் செகண்ட் சிங்கில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தனக்கு பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியத்துவம் இல்லை என மணிரத்தினம் மீது கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் விக்ரம் தொடர்ந்து நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை புறக்கணித்து வந்தார்.

இந்த நிலையில் விக்ரம் உடன் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு ஐதராபாத்தில் நடந்த செகண்ட் சிங்கில் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொண்டார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமை ரெட் ஜெயின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியாகி வரும் பொன்னியின் செல்வன் குறித்த விளம்பர புகைப்படங்களில் ரெட் ஜெயண்ட் லோக இடம்பெற்று வருகிறது. ஆனால் ரெட் ஜெயின் நிறுவனத்திடம் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் கொடுத்ததில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில், பொதுவாக பெரும்பாலான படங்களை ரெட் ஜெயின் தான் தமிழ்நாடு தியேட்டர்களில் ரிலீஸ் செய்து, திரையரங்கு உரிமையாளர்கள் ஏமாற்றாத வகையில், சரியான கணக்கை படத்தின் தயாரிப்பு நிறுவனத்திலும் ஒப்படைத்து, தனக்கான கமிஷனை பெற்று வருகிறார்கள். இதனால் பட தயாரிப்பாளர்களுக்கு முறையான லாபமும் கிடைக்கிறது. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களை ஏமாற்றும் செயல் தற்பொழுது இல்லை.

இப்படி இருக்கையில், எதற்காக ரெட் ஜெயன் நிறுவனத்திடம் பொன்னியின் செல்வம் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் கொடுத்ததை மணிரத்திற்கு உடன்பாடு இல்லை என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி அந்த படத்தை எடுத்து கொடுத்துள்ளார் மணிரத்தினம்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் கிடைக்கும் லாபத்தில் மணிரத்தினத்திற்கு 30 சதவீதமும் லைக்கா நிறுவனத்திற்கு 70 சதவீதம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் விநியோக உரிமையை ரெட் ஜெயின் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளதால், படம் வெளியாகி அந்த படம் சரிவர போகவில்லை என்றால் தாங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.

அதனால் முன்கூட்டியே அவுட்ரேட் விற்பனை செய்தால் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு பெருந்தொகை நமக்கு கிடைத்துவிடும். அதில் தயாரிப்பாளருக்கு ஒரு பங்கும், மணிரத்தினத்திற்கு ஒரு பங்கும் படம் வெளியாவதற்கு முன்பே கிடைத்து விடும் .அதன் பின்பு படம் வெளியாகி நன்றாக இல்லை என்றால் கூட நமக்கு பெரிய அளவில் நஷ்டம் இருக்காது என மணிரத்தினம் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிரத்தினம் படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை. படம் நன்றாக இருக்கிறது என்றால் திரையரங்குகளில் வெளியாகி சமீபத்தில் வெளியான KGF, RRR, விக்ரம், போன்ற படங்கள் போன்று வசூலை அள்ளி குவிக்கும் ஆனால் மணிரத்தினம் அவருடைய படைப்பின் மீதே அவருக்கு நம்பிக்கை இல்லாததால் தான் எதற்கு ரிஸ்க் என இந்த முடிவில் இருப்பது, இவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் நிலைமை பரிதாபமாக இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

சிம்பு – அதிதி சங்கர் விவகாரம் முடிவுக்கு வந்தது… செம்ம மகிழ்ச்சியில் இயக்குனர் சங்கர்… என்ன நடந்தது தெரியுமா.?