பொன்னியின் செல்வன் லாபத்தில் சோழனுக்கு மணிமண்டம்… மணிரத்தினத்தை கொண்டாட தயாராகும் தமிழர்கள்.

0
Follow on Google News

உலகில் பல்வேறு பகுதிகளில் போர் புரிந்து வெற்றி பெற்று புலி கொடியை நாட்டி, ஆசியா கண்டத்தையே ஆட்சி புரிந்தவர் தமிழ் மன்னர் ராஜராஜ சோழன். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உலகில் முதல் முதலில் முப்படைகளை கட்டியமைத்து தமிழனின் பெருமையை உலகறிய செய்தவர் சோழ மன்னர். தமிழனின் கட்டிடக்கலைக்கு இந்த உலகில் நிகர் ஏது.? என இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியமைத்தவர் ராஜராஜ சோழன்.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு மாவீரனுக்கு அடையாளமாக தமிழகத்தில் எந்த ஒரு நினைவுச் சின்னமும் இல்லாதது ஒவ்வொரு தமிழனுக்கும் வருத்தம் அடையும் செய்யும் செயல். மேலும் உரையூரில் ராஜராஜ சோழனின் சமாதி என்று கூறப்படும், அந்த இடம் ஒரு சிறிய கொட்டகையின் கீழ் இருப்பதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் குற்ற உணர்வுடன் தலை குனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மராட்டியத்தை ஆண்ட மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜிக்கு பிரம்மாண்ட சிலை, மணிமண்டபம் என மராட்டியர்கள் மார்தட்டி கொள்ளும் அளவுக்கு மகாராஷ்டிராவில் சத்திரபதி சிவாஜிக்கு நினைவு சின்னம் உள்ளது. இதுபோன்று இந்தியா முழுவதும் உள்ள அந்தந்த இன மக்கள் பெருமை அடையும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது, அந்த இனத்தின் மன்னர்களின் நினைவு சின்னங்கள்.

ஆனால் சங்கத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னன், உலகையே ஆண்ட ராஜராஜ சோழன், கட்டிடக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவ மன்னன். இப்படி எந்த ஒரு தமிழ் மன்னருக்கும் வியப்பூட்டும் வகையில் எந்த ஒரு நினைவுச் சின்னமும் தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அமைக்கப்படவில்லை. இதற்கு மாறாக அவர்கள் சார்த்த கட்சி தலைவர்களின் சிலைகளை தமிழகம் முழுவதும் நிறுவினார்கள் ஆட்சியாளர்கள்.

இந்த நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, மிக பிரம்மாண்டமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் கூட, அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் எட்டாத உயரத்திற்கு பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சோழ மன்னரின் வரலாற்று கதையை படமாக எடுத்து உலகம் முழுவதும் மக்களிடம் திரையின் வாயிலாக தமிழனை தலைநிமிர செய்த மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வரும் லாபத்தில் ஒரு சிறிய தொகையில் சோழ மன்னர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்கிற குரல் ஒலித்து வருகிறது.

இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இருவரிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 200 முதல் 300 கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டும் பொன்னியின் செல்வன் படம் என எதிர்பார்க்க படும் நிலையில், லாபத்தில் பத்து சதவீதம் ஒதுக்கினால் கூட 20 முதல் 30 கோடி ரூபாய்க்கு உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்டப்படலாம்.

கல்கியின் பொன்னியின் செல்வன் படம் அரசுடைமையாக்கவில்லை என்றால், அந்த கதைக்கான உரிமம் தொகைய கல்கியின் குடும்பத்திற்கு மணிரத்தினம் கொடுக்க வேண்டும், ஆனால் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளதால், மணிரத்தினம் யாருக்கும் கதைக்கான பணம் கொடுக்க தேவையில்லை. அந்த வகையில் கதைக்கான உரிமம் தொகையை கூட மணிரதத்தினம் ஒதுக்கி, அந்த பணத்தில் ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று பலர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதை செய்தால் தமிழர்கள் மனதில் காலத்தால் அழிக்க முடியாத நீங்கா இடத்தை மணிரத்தினம் பிடித்து விடுவார். ஆனால் இந்த விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் முன் வந்தாலும், மணிரத்தினம் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிரத்தினம் மனது வைத்தால் நிச்சயம் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்டி எழுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.