பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள சென்னை தனியார் பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வில்லை என்றால் தமிழக அரசு கலைக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்திருந்தார், இதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் அதில், என்ன நடக்கிறது இந்த நாட்டில்.. எவனெவனோ மிரட்டுகிறான் ஒரு மாதம் கூட ஆகாத மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு மாநில அரசை!
மேலும் கல்வி கற்க பயமின்றிச் சென்றுவரவேண்டிய பள்ளியில் சில பிஞ்சுப் பெண்குழந்தைகளுக்கு ஒரு அவலம் நேர்ந்திருக்கிறது.. அதைக்குறித்து அக்கறை கொள்ளாமல், அந்தப் பள்ளியைக் காப்பாற்ற ஒரு மாநில அரசாங்கத்தையே மிரட்டிப் பார்க்கிறான் என்றால், எப்படிப்பட்டவர்களிடம் இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம் சிக்கியிருக்கிறது என்று விளங்குகிறதா! என ஆக்ரோசமாக தனது கோவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு இருப்பது குறித்து அவரது மனைவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை சுட்டி காட்டி, நீங்க யோக்கியன் வேஷம் போட வேண்டாம் என ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி கொடுத்து வரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 2014ம் ஆண்டு பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி சுகந்தி கொட்டிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது ஜேம்ஸ் வசந்த் மனைவி கொடுத்த புகார் மனுவில் தெரிவித்ததாவது. ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் தங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. விஜிபி பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவும் ஜேம்ஸ் வசந்தனும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.. முதல் மனைவி உயிருடன் இருக்கையில் விவாகரத்து வாங்காமல் எப்படி இன்னொரு பெண்ணை மனைவி ஆக்கிக் கொள்ளலாம் எனவே சட்டநடவடிக்கை எடுக்கும்படி சுகந்தி புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நடத்த சில மாதங்களுக்கு முன்பு 2013ம் ஆண்டு செக்ஸ் குற்றச்சாட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக,சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்தது குறிப்படத்தக்கது.