பாடகி சின்மயி மீண்டும் பாடலாசிரியர் வைரமுத்து பற்றி தொடர்ந்து பாலியல் குற்றசாட்டை வைத்து வருகிறார், அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வைரமுத்து குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இதுவரை 17 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் கொடுத்துள்ளார்கள், பாதிக்கப்பட்ட பல பெண்களிடம் பேசி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதையெல்லாம் மறுப்பது ஏன்? ரைஹானா என்கிற பெண் அவர் அப்படி தான் என பேட்டி கொடுத்துள்ளார்கள்,
மாலினி யுகேந்திரன் ‘என் கண்ணு முன்னாடி நடந்தது என கூறியிருக்கிறார்கள், புவனா சேஷன் என்பவர் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக என்னுடைய சினிமா வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார் என பேட்டி கொடுத்தார். மேலும் வைரமுத்து நடத்துகின்ற விடுதியில் பெண்கள் தப்பித்து ஓட வேண்டிய நிலைமை உள்ளது. எப்ப வேண்டுமானாலும் பெண்கள் அறைக்குள் புகுந்து விடுவார் வைரமுத்து என குற்றம் கூறியிருந்தார்கள், ஆனால் இதை அனைத்தையும் மறைத்துவிட்டு சின்மயி மட்டும் தான் புகார் கூறுகிறார், மற்ற அவர் மீது புகார் தெரிவிக்கவில்லை என பொய் சொல்றாங்க,
“அறியப்படடவர்கள் மீது பழி சுமத்துவது வழக்கமாகிவிடடாது”ன்னும், “ஆதாரங்களை வெச்ச்சுருக்கேன்”னு சொன்னவர், இத்தனை நாளில் என் மீது Defamation case போட்டுருக்கலாமே? ஆனால் அதை செய்த்திருந்தால் என்ன பத்தி பேச வேண்டாம்னு சொல்லுன்னு சொன்ன தொலைபேசி உரையாடல் வெளியில் வந்திருக்குமே.
என்னை மட்டும் குறி வைத்து என் மீது விசாரணை நடத்தாமல் என்னை வேலை செய்யவிடாமல் தடுத்தது அயோக்கியத்தனம். அதை பற்றி நான் கேள்வி கேட்க கூடாது என்று சொல்வதும் அயோக்கிய தனம். இத்தனை நாட்களில் Independent investigation நடத்திருக்கலாமே? ஏன் பண்ணல?
நான் என் குற்றசாட்டுகளை முன் வைத்தபோது, இது பார்ப்பனர்களின் சதி, ரஃபேல் விவகாரத்தை திசை திருப்பும் செயல், விளம்பர யுக்தி, மோடியின் சதி என முற்போர்க்கு மற்றும் பெண்ணியவாதம் பேசும் அரசியல்வாதிகள் அவர்கள் இஷ்டத்துக்கு பேசுனாங்க. ஒரு தனியார் பத்திரிகையில் எனக்கு பெங்களூரில் பாஜக விடு வாங்கி கொடுத்து, கவிஞர் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக பொய்யான தகவலை வெளியிட்டார்கள்.
தெரியாம தான் கேட்கிறேன், இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்குவதற்கான கட்டாயம் என்ன.?இவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க? அவர் தனது அரசியல் நண்பர்கள் பெயரை பயன்படுத்தி பெண்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது உண்மை தான், இது பல ஆண்டுகளாக வெளிப்படையாகவே நடந்து வருகிறது, இதையெல்லாம் யாரும் மூடி மறைத்தாலும், இல்லை என பொய் சொன்னாலும் நான் கேள்வி கேட்டுகிட்டே தான் இருப்பேன்.
·
MeToo புகார்களை விசாரணை செய்ய தனி பிரிவு ஏற்படுத்த போவதாக மத்திய அமைசர் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்க போவதாக சொன்னாங்க ஆனால் அதுவும் நடக்கவில்லை, என்னுடைய புகாரை விசாரணை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன், ஆனால் யாருடைய பெயரை பயன்படுத்தி வைரமுத்து பெண்களை மிரட்டு வருகிறாரோ அவர்களே எதுவுமே நடக்காத மாதிரி இவரை மேடையில் ஏற்றி மகுடம் சூட்டி, யோக்கியர் மாதிரி காண்பிக்கின்றனர், இது ஒரு பாலியல் குற்றவாளிகளை ஊக்க படுத்துவது போன்று உள்ளது என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.