இயக்குமார் பாலுமஹிந்திராவிடம் உதவியாளராக நான்கு வருடம் பணியாற்றிய நா.முத்துக்குமார் தனது 24வயதில் சீமான் இயக்கத்தில் வெளியான வீரநடை படத்தில் பாடலாசிரியராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அறிமுகமான குறுகிய காலத்தில் அதிக படங்களுக்கு பாடல் எழுதினார், 2001ம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உடன் கூட்டணி சேர்ந்தார்.
யுவன்சங்கர் ராஜா இசையில் ஒரு சில பாடல்கள் எழுதி வந்த நா.முத்துக்குமார், காதல் கொண்டேன் திரைப்படத்தில் நான்கு பாடல்களை எழுதி இருந்தார், அவர் எழுதிய அணைத்து பாடல்களும் மெஹா ஹிட் ஆனதை தொடர்ந்து நா.முத்துக்குமார் தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக வலம் வர தொடங்கினர், அதே போன்று நா.முத்துக்குமார் பாடல் வரிகள் யுவன் சங்கர்ராஜாவின் இசையை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.
இதனை தொடர்ந்து இதே கூட்டணியில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் ஒருவரே எழுதி இருந்தார் இந்த படம் மெஹா ஆனது, இந்த படம் வெற்றிக்கு நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும் யுவன் இசையும் முக்கிய பங்காற்றியது. இதனை தொடர்ந்து புதுப்பேட்டை, தீபாவளி, தாமிரபரணி , கற்றது தமிழ், வேல், யாரடி நீ மோஹினி என தொடர்ந்து நா.முத்துக்குமார் மற்றும் யுவன் சங்கர்ராஜா கூட்டணி வெற்றிகளை பெற்றது.
2013ம் ஆண்டு யுவன் இசையில், நா முத்துக்குமார் எழுத்தில் வெளியான கேடி பில்லா கேலடி ரங்கா திரைப்படத்தில் இடம் பிடித்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் மற்றும், தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல்கள் மிக பெரிய ஹிட் கொடுத்தது, இதில் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருதை பெற்றார், இதன் பின்பு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படங்கள் தொடர் சரிவை சந்தித்து வந்தாலும் அவ்வப்போது நா.முத்துக்குமார் பாடல் வரிகள் யுவனை காப்பாற்றி வந்தது.
ஆனால் 2016ம் ஆண்டு நா முத்துக்குமார் மறைவுக்கு பின் யுவன் சங்கர்ராஜா இசையில் வெளியான படங்கள் சொல்லும்படி ஏதும் இல்லை, மேலும் அடுத்தடுத்து இவர் இசையில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவ இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது தற்போது தமிழ் சினிமா உலகில் யுவன் சங்கர்ராஜா இருக்கின்றாரா என பலருக்கும் சந்தேகமா எழும் அளவுக்கு அவர் காணாமல் போய்விட்டார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனது நெருங்கிய சினிமா நட்பு வட்டாரத்தில் மனம் விட்டு பேசிய யுவன் சங்கர்ராஜா, எனது இசையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நா.முத்துக்குமாரின் வரிகளும் என்பது மறுக்க முடியாதது. தற்போது அவர் மறைந்த பின் என் இசை என்ன செய்வது என்று தெரியாம தனியாக தத்தளித்து கொண்டு இருக்கிறது, நா முத்துக்குமார் மரணம் அடைந்து என்னுடைய சினிமா வாழ்கையவே காலி செய்துவிட்டு நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டார் என புலம்பி தவிக்கிறார் யுவன் சங்கர்ராஜா என கூறப்படுகிறது.