அம்மா இறந்துவிட்டார்..லியோ படப்பிடிப்பில் நடந்த கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்..

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கேமராமேனாக மனோஜ் பரமஹம்சா செயல்படுகிறார். ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் கேமராமேனாக மனோஜ் பரமஹம்சா பணியாற்றினார். சுமார் 60 நாள் படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் லியோ படபிடிப்பு குழுவினர் அங்கே கடும் குளிருக்கும் இடையிலும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திடீரென கேமராமேன் மனோஜ் பரமஹம்சா தாயார் மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தியை அறிந்ததும் உடனே அந்த படத்தின் தயாரிப்பாளர் லலித், நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம் உடனே சென்னை சென்று தாய்க்கு செய்ய வேண்டிய அனைத்து காரியத்தையும் செய்து முடியுங்கள் என லலித் அனுப்பி வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள தயாரிப்பாளர் லலித் தரப்பினர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து காஷ்மீரில் அசிஸ்டன்ட் கேமரா மேனை வைத்து முடிந்த அளவு படத்தை எடுத்து வந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆனால் படத்தின் சில முக்கியமான காட்சிகள் படமாக்க பட இருப்பதால் தான் அங்கே சென்றால்தான் அது முடியும் என்பதை நன்கு உணர்ந்த மனோஜ் பரமஹம்சா.

உடனே அம்மாவுக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து முடித்துவிட்டு அன்று இரவே காஷ்மீர் பறந்துள்ளார். அடுத்த நாளே படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார் மனோஜ் பரமஹம்சா. இந்த சம்பவத்தை பார்த்த பட குழுவினர் பலருக்கு கண்ணீர் வர வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.