லியோ சோலி முடிந்தது… விஜய்க்கு எதிராக குடும்ப பெண்கள்… சிறுவர்கள் பார்க்கவே முடியாதாம்….

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, லியோ படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், நான் ரெடி மற்றும் பேட் ஆஸ் போன்ற பாடல்கள் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், லியோ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் திரையரங்குகள் மற்றும் யூட்யூபில் வெளியானது. லியோ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருந்த இலட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள், படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க திரையரங்குகள் நோக்கி படையெடுத்து விட்டனர். கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் வெளியான ட்ரெய்லரைப் பார்த்து ஆட்டம்பாட்டம் என கொண்டாடி தீர்த்தனர்.

மேலும், சில திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் செய்த அளப்பரையால் இருக்கைகள் சேதமடைந்தன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் காட்டத்தில் உள்ளனர். இதற்கிடையில், படக்குழுவினர் லியோ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர். பொதுவாக ஒரு படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு முன்பு, சென்சார் போர்டுக்கு அனுப்பி சான்றிதழ் வாங்குவார்கள்.

அந்த வகையில், லியோ படமும் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், படத்தில் கொடூரமான வன்முறைக் காட்சிகளும், எக்கச்சக்க கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்தில் எப்படிப்பட்ட வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பதை, அவரது விக்ரம் படத்திலேயே நாம் பார்த்திருப்போம். அதுமட்டுமில்லாது, இப்போது இயக்குனர் வெற்றிமாறனுக்கே டஃப் கொடுக்கும் வகையில், இயக்குனர் லோகேஷ் லியோ படத்தில் நிறைய கெட்டவார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.

அதைக் கேட்ட சென்சார் போர்டுக்கு காதுகளில் இருந்து ரத்தம் வராதது மட்டும்தான் குறை. அந்தளவுக்கு மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்த சென்சார் போர்டு, லியோ படத்தில் பல வார்த்தைகளை மியூட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சில வார்த்தைகளை மாற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்பதாலும், அவரது படங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என்பதாலும் லியோ படத்திற்கு சென்சார் போர்டிடமிருந்து U சான்றிதழை வாங்க படக்குழுவினர் முயற்சித்து வந்தனர்.

ஆனால், படத்திற்கு எந்த வகையான சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் வெளியான லியோ படத்தின் டிரெய்லரில் நிறைய வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, நடிகர் விஜய் அசிங்க வார்த்தையில் ஆக்ரோஷமாக கத்தும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதனாலேயே லியோ படத்தை பார்ப்பதற்கு குழந்தைகளுக்கு அனுமதி கிடைக்காது என்றும் சோஷியல் மீடியாவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் குடும்ப ஆடியன்ஸ் மற்றும் சிறுவர்களை லியோ படத்தை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்துள்ளதால், லியோ படத்தின் வசூலை பாதிக்கும் என்றும் சிலர் கணித்துள்ளனர். இந்த நிலையில் இன்று லட்சணக்கான ரசிகர்கள் பின்பற்ற கூடிய விஜய், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் என விஜய்க்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், சற்றும் சமூக பொறுப்பில்லாமல் ஆபாச வார்த்தைகளை பேசி விஜய் நடித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.