பின்னணி காரணம் இது தான்… பெண் டிரைவர் ஷர்மிளா பற்றி பரபரப்பை கிளப்பிய சவுக்கு சங்கர்..

0
Follow on Google News

கோவையில் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மிக குறுகிய காலத்தில் சமூக வலைத்தளம் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர், இதற்கு முன்பு தமிழகத்தில் பேருந்து ஓட்டுநராக, அம்புலன்ஸ் ஓட்டுநராக பல பெண்கள் சத்தமே இல்லாமல் சாதனை படைத்து இருந்தாலும், அவர்கள் யாரும் பிரபலமாக அறியப்படாமல் இருந்ததற்கு காரணம், அவர்கள் யாரும் மீடியா வெளிச்சத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் கோவையை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா அவருடைய வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்ததால் மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்து பிரபலமாக அறியப்பட்டார், மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து அது செய்தியாக வெளியானதை தொடர்ந்து மேலும் பெண் டிரைவர் ஷர்மிளாவை பிரபலப்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்த போது அந்த பேருந்தில் பெண் நடத்துனர் எம்பி கனிமொழியிடம் டிக்கெட் கேட்டதால், பெண் டிரைவர் ஷர்மிளா மற்றும் பெண் நடத்துனர் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது, இதனால் அந்த பெண் டிரைவர் வேலையை விட்டு அவரே விலகியதாக பேருந்து நிர்வாகம் தரப்பு தெரிவித்தது,

இந்த நிலையில் பெண் டிரைவர் ஷர்மிளா விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சவுக்கு சங்கர், அந்த பெண் டிரைவர் சர்மிளா குறித்து கோயம்புத்தூரில் விசாரித்து விட்டேன். நல்லா வரவேற்பு கிடைத்ததும் அந்த பெண் தன் மனதில் நயன்தாரா என்ற நினைப்பு வந்துருச்சு, அந்த அளவுக்கு தான் மிகப்பெரிய பிரபலம் என நினைத்துக் கொண்டு நாம் எங்கே போய் சென்றாலும் தான் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது போன்று அந்த சின்ன பொண்ணு செயல்படுகிறது.

அந்த பெண்ணின் குடும்பத்தினரும், அந்தப் பெண்ணின் இது போன்ற செயல்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். ஒரு பெண் தன்னுடைய சாமர்த்தியத்தால் அரசு வேலை வாங்கி விடலாம் என நினைத்துக் கொண்டு. இது போன்ற செயலில் ஈடுபடுவதை நாமலும் ஆதரிக்கக் கூடாது. என தெரிவித்த சவுக்கு சங்கர், மேலும் பெண் டிரைவர் ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தது பற்றி சவுக்கு சங்கர் பேசுகையில்

பிக் பாஸ் நடத்தும் கமலஹாசனிடம் என்ன எதிர்பார்க்க முடியும். பிக் பாஸ் எவ்வளவு பெரிய ஆபாச நிகழ்ச்சி என்பது தெரியும். அந்த நிகழ்ச்சியை நடத்திட்டுதுட்டு வாங்கிட்டு கட்சி நடத்துகின்றவர் கமல்ஹாசன். இதெல்லாம் அவர் பண்ணவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவருக்கு என்ன கொள்கை இருக்கு.? எந்த கொள்கையும் இல்லாமல் நடுவில் உட்கார்ந்து கொண்டு மையம் என்று சொல்வது தான் கொள்கையா.?

அந்தப் பொண்ணு ஏமாற்றுகிறது என்று தெரிய வேண்டாமா? கோயமுத்தூரில் கமல்ஹாசன் கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தாலே தெரிந்துவிடும். மேலும் சமூக வலைதளத்தில் அந்தப் பெண் டிரைவரின் பழைய வீடியோக்களை பார்த்தாலே உடனே தெரியும். இதெல்லாம் விளம்பர நோக்கத்திற்காக தான் அந்த பெண் செய்கிறது என்று.

இதெல்லாம் ஊக்கப்படுத்த கூடாது. உண்மையிலேயே கஷ்டப்படுகின்றவர்கள் எவ்வளவோ பெயர் இருக்கிறார்கள். பெண் பெண் நடத்துனர் போடக்கூடாது என டிரைவர் ஷர்மிளா தெரிவித்திருக்கிறார் என்றால் எவ்வளவு சேட்டை அவருக்கு. இதெல்லாம் எப்படி ஒரு நிறுவனம் பொறுத்துக் கொண்டிருக்கும். ஒரு பெண் வேலையை செய்யாமல் இதுபோன்று செய்து கொண்டிருந்தால் அந்த நிறுவனம் எப்படி அந்த பெண்ணை அனுமதிக்கும்.

என்னுடைய பஸ்ஸை வைத்து கொண்டு நீ விளம்பரம் செய்து கொண்டிருக்கிறாய் என்றால் உன்னை கூப்பிட்டு கண்டித்ததில் என்ன தவறு என தெரிவித்த சவுக்கு சங்கர். மேலும் கனிமொழி வந்ததால்தான் எனக்கு வேலை விட்டு நீக்கினார்கள் என்று சொல்வது மிகப்பெரிய மோசடி. இதன் பின்பும் கமலஹாசன் இது மாதிரி விஷயங்களை ஊக்கப்படுத்தினால் என்ன அர்த்தம் தவறான நபரை ஊக்கப்படுத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.