பிளாட்பாரம் டூ சினிமா பைனான்சியர்… எப்படி வந்தது இத்தனை கோடி.? யார் இந்த அன்பு செழியன்.?

0
Follow on Google News

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அன்புச்செழியன். தனக்கு சுமார் 26 வயது இருக்கும் போது 90களில் மதுரையில் பிளாட்பாரம் கடைகளில் மற்றும் ரோட்டோரத்தில் இருக்கும் சிறிய கடைகளுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலையை தொடங்கினார் அன்பு செழியன். காலையில் கடன் கொடுத்து அன்று மாலையே வட்டியுடன் வசூல் செய்து விடுவார் அன்புசெழியன்.

காலையில் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தால் அதற்கு பத்து சதவீதம் வட்டியை பிடித்துக் கொண்டு 900 ரூபாய் கடன் காரர்களுக்கு கொடுப்பார். அன்று மாலை வட்டியுடன் கடன் வாங்கியவர்களிடம் 1000 ரூபாய் வசூல் செய்துவிடுவார். அவ்வப்போது ராமநாதபுரம் சென்று வந்த அன்புச்செழியன், மதுரையில் லாட்ஜ்ல் ரூம் எடுத்து தங்கி வட்டி தொழிலை செய்து வந்தார்.

இப்படி தன்னுடைய வட்டி தொழிலை மதுரையில் உள்ள பிளாட்பார கடைகளில் தொடங்கிய அன்புசெழியன், ஒரு கட்டத்தில் வட்டி தொழில் சூடு பிடிக்க குடும்பத்துடன் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு குடி பெயர்ந்தார். இதனைத் தொடர்ந்து சினிமா விநியோகஸ்தர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்க தொடங்கியவர். படம் வெளியாகும் முன்பு வட்டிக்கு பணம் கொடுத்து, படம் வெளியான பின்பு விநியோகஸ்தர்களிடம் வட்டியுடன் திரும்பி பணத்தை பெற்று விடுவார்.

இதனை தொடர்ந்து சினிமா தயாரிப்பளர்கள் பலர் அன்புச்செழியனை தேடி வர தொடங்கினார்கள், அதே நேரத்தில் அரசியல் பிரமுகர்கள் உடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, அரசியல்வாதிகளின் கருப்பு பணம் அன்புச்செழியனிடன் புழங்க தொடங்கியது. தங்களுடைய கருப்பு பணம் அன்புச்செழியனிடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும், மேலும் நமக்கு தேவைப்படும் போது அவர் உடனே கொடுத்து விடுவார் என்கின்ற நம்பிக்கையில் அரசியல்வாதிகள் அன்புச்செழியனிடம் கருப்பு பணத்தை குவிக்க தொடங்கினார்கள் என்று கூறப்படுகிறது.

அரசியல்வாதிகளின் கருப்பு பணம் தான் அன்பு செழியனின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதுவும் கடந்த பத்து வருடத்தில் தான் அன்புச் செழியனின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்தது. சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ய தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் கடன் வாங்கியவர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட அன்புச்செழியன், தன்னிடம் கடன் வாங்கிய இயக்குனர் சசிகுமார் உறவினர் ஒருவர் அன்புசெழியன் கடும் டார்ச்சர் தாங்க முடியாமல் மறைந்த பின்பு தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டார்.

ஒரு காலத்தில் இந்தி சினிமாவை தாவூத் இப்ராஹிம் தனது கட்டுக்குள் வைத்திருந்தாரோ அதேபோன்று இன்று ஒட்டுமொத்த சினிமாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் அன்புச் செழியன். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் சுமார் 77 கோடி ரூபாய் பணம், நகை மற்றும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

அதன் அடிப்படையில் மீண்டும் தற்பொழுது அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நான்கு நாட்களாக நடக்கும் மெகா ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு அன்புசெழியன் மீது நடந்த வருமான வரித்துறை ரெய்டிற்கு பின்பு அரசியல்வாதிகள் அன்புசெழியனிடம் அவர்களின் பணத்தை முதலீடு செய்வதை நிறுத்தி கொண்டுள்ளனர்.

இருந்தும் தன்னிடம் இருக்கும் பணத்தில் தான் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார் அன்புசெழியன். இந்நிலையில் தன்னை வருமான வரித்துறை சுற்றி வலைத்துள்ளதை உணர்ந்த அன்புசெழியன், இனி தன்னிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பதில் தான் தீவிரமாக இருப்பார், புதியதாக சினிமாவில் பைனான்ஸ் செய்ய மாட்டார் என கூறப்படுவதால், ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவயானி, ரம்பாவை தூக்கிய அன்புச்செழியன்… வாங்கிய பணத்திற்கு என்ன செய்தார் தெரியுமா.?