தற்பொழுது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றவர் பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட அன்பு செழியன் இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளார். இரவு 12 மணிக்கு சென்று 100 கோடி ரூபா கடன் கேட்டாலும் உடனே கொடுக்க கூடிய ஆற்றல் படைத்தவர் அன்புச் செழியன்.
ஒரு காலத்தில் மார்வாடிகள் கட்டுப்பாட்டில் தமிழ் சினிமா தத்தளித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் மார்வாடிகளிடம் கடன் பெற்று படத்தை தயாரித்தார்கள். கடன் கொடுக்கும் மார்வாடிகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். இதனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கடனை அடைக்க முடியாமல் தத்தளித்தனர். மேலும் கடன் கேட்க வரும் தயாரிப்பாளர்களிடம் இந்த படத்தில் நடிக்கும் நடிகைகள் பற்றி விசாரிப்பார்கள்.
தேவைப்பட்டால் பாலியல் ரீதியாக தங்களுக்கு அந்த நடிகையை அட்ஜஸ்ட் பண்ண அனுப்பி விட வேண்டும் என்று கடன் கொடுப்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களிடம் உத்தரவாதம் வாங்குவார்கள் மார்வாடிகள் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து இருந்த மார்வாடிகளை விரட்டி, தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் சினிமா பைனான்சியர் அன்பு செழியன்.
இவரிடம் கடன் வாங்கிய இயக்குனர் சசிகுமார் உறவினர் கடனை திருப்பி தரமுடியாமலும், அன்பு செழியனின் கடும் டார்ச்சர் தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை மரணத்திற்கு பின்பு தனது போக்கை மாற்றிக் கொண்டார் அன்புச் செழியன். ஆனால் இந்த தற்கொலை சம்பவத்துக்கு முன்பு, கொடுத்த பணத்தை திரும்ப வசூல் செய்ய மிக கடுமையாக நடந்து கொள்வார் அன்பு செழியன் என கூறப்படுகிறது.
அதில் 2003 ஆம் ஆண்டு நடிகை தேவயானி அவருடைய கணவர் ராஜ்குமார் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்த படம் காதலுடன். இந்த படத்தை தயாரிக்க அன்புச் செழியனிடம் கடன் பெற்றிருந்தார் தேவயானி. அதே போன்று 2003 ஆம் ஆண்டு நடிகை ரம்பா தன்னுடைய சொந்த தயாரிப்பில் அவருடைய நடிப்பில் வெளியான படம் த்ரீ ரோசஸ். இந்த படத்திற்கு அன்புச் செழியனிடம் கடன் பெற்றிருந்தார் ரம்பா.
இந்நிலையில் தேவயானி தயாரிப்பில் வெளியான காதலுடன் மற்றும் ரம்பா தயாரிப்பில் வெளியான த்ரீ ரோஸ் ஆகிய இரண்டு படங்களுமே சரிவர போகவில்லை. இதனால் அன்புச் செழியனிடம் வாங்கிய பணத்தை இவர்களால் திருப்பித் தர முடியவில்லை. பணத்தை வட்டியுடன் திரும்பி வாங்க அன்புசெழியன் தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தனர் தேவயானி மற்றும் ரம்பா இருவரும்.
இறுதியில், ரம்பா, தேவயானி இருவரையும் மதுரைக்கு வரவழைத்து அன்புசெழியன் அலுவலகத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து போக முடியும் என்று மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் வாங்கிய பணத்தை கொடுத்த பின்பு தான் இருவரும் அங்கிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அன்புசெழியன் பெண்கள் விஷயத்தில் மிக கண்ணியமாக நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலும் பெண்களிடம் எந்த ஒரு கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள மாட்டார். இதற்கு முன்பு இருந்த மார்வாடிகள் போன்று நடிகைகளை தவறாக பயன்படுத்த மாட்டார் என்கிற நற்பெயரும் அன்புசெழியனுக்கு சினிமா துறையினர் மத்தியில் உண்டு என்கிற சினிமா வட்டாரங்கள்.