ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அதிரடி வருமான வரி துறை சோதனையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் நிலை குலைந்து போய் உள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை ஒரு சதவீத வட்டிக்கு வாங்கி, அந்த பணத்தை மூன்று காசு வட்டிக்கு சினிமாவில் முதலீடு செய்து வருகிறார் அன்பு செழியன்.
அன்பு செழியனிடம் பணத்தை கொடுத்தால், பணத்திற்கு பாதுகாப்பு, மேலும் எந்த நேரம் கேட்டாலும் உடனே பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார் அன்புசெழியன் என்பதால், அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் அன்புசெழியனை நம்பி முதலீடு செய்து வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் ஆகிய இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் சொந்த பணத்தில் படம் எடுப்பது இல்லை.
லண்டனில் இருந்து வந்துள்ள பிரபல லைக்கா நிறுவனம் சுமார் 2000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து தமிழ் சினிமா படங்களை தயாரித்து வரும் நிலையில், அவர்களும் அன்புச்செழியனிடம் கடன் வாங்கி தான் படம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த வருமான வரித்துறை சோதனையில் பல கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் அன்புச்செழியனிடம் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதை தொடர்ந்து வருமான வரித்துறையினர் அன்புசெழியனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே அன்புச்செழியனை தீவிரமாக கண்காணித்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இனிவரும் காலங்களில் தீவிரமாக கண்காணிப்பார்கள் என்பதால் அன்புசெழியன் மிக பெரிய நெருக்கடியில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இனி சினிமாவில் முதலீடு செய்து பிரச்சினையை சந்திக்க வேண்டாம் என்கின்ற முடிவிற்கு வந்துள்ள அன்பு செழியன். வேறொரு தொழிலில் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார் என்று கூறப்டுகிறது. இதனால் படிப்படியாக சினிமாவில் முதலீடு செய்வதை குறைத்து கொள்ள இருக்கிறார் அன்புசெழியன்.
இந்நிலையில் தற்பொழுது வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சிலர் அணுகி அடுத்தடுத்து தங்களது படங்களுக்கு பைனான்ஸ் செய்ய கடன் கேட்டு அன்புசெழியனிடம் சென்றுள்ளார்கள். ஆனால் அன்புச்செழியன் செம்ம டென்ஷனில், போங்கப்பா….. இனிமே நான் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வதாக இல்லை என விரட்டி அடித்துள்ளார். இதனால் கடன் வாங்கி படம் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அஜித், விஜய், சூர்யா,கமல் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் அன்புச்செழியனிடம் கடன் வாங்கித்தான் அதிக சம்பளம் கொடுத்து இவர்களை வைத்து படம் எடுக்கிறார்கள். ஆனால் அன்பு செழியனின் தீடிர் இந்த முடிவினால் அஜித்,விஜய்,சூர்யா, கமல், ரஜினி போன்ற நடிகர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு தான் இனி படம் எடுக்க வேண்டும் என்கிற சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது.