பிரபல பின்னனி பாடகி சின்மயி, மீ டூ விவகாரத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவின் முகத்திரையை கிழித்து பொது மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியவர். வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் குறித்து பட்டியலை வெளியிட்டு, பாதிக்க பட்ட பெண்கள் எப்போது எந்த இடத்தில் என்பது போன்ற விவரங்களையும் வெளியிட்டு வைரமுத்துவின் பொது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தார் சின்மயி.
மேலும் வைரமுத்து தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தை வெளியிட்டு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். சின்மயி விவாகரத்துக்கு முன்பு பல்வேறு மேடைகளில் சிறப்பு அழைப்பாளராக தோன்றிய வைரமுத்து. இதன் பின்பு வீட்டிலே முடங்கினர். இந்நிலையில் தற்போது கோவையில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம குறித்து கருத்து தெரிவித்திருந்த சின்மயிக்கு, திமுக ஆதரவாளர் தன்னை திராவிடன் ஸ்டாக் என அடையாள படுத்திகொண்டு ஒருவர், இந்த உலகத்திலே தன்னிடம் தவறாக நடக்க முயன்ற அவரை தன் திருமணத்திற்கு அழைத்து மேடையில் துள்ளி குதித்து ஆடிய பெண் ஒருவர் உண்டு என்றால் அது நீங்கள் தான் என கேள்வி எழுப்ப, அதற்க்கு சின்மயி, உங்கள மாதிரி ஆம்பளைங்களுக்கு பெண்கள் உயிரோட இருந்தா தாங்காது.
செத்துட்டு லெட்டர் எழுதிவெச்சுட்டு போகணும். 2 நாளைக்கு ஊள அழுக அழுதுட்டு, உங்க கண் முன்னால இருக்கற பாலியல் குற்றவாளிகளோட கூத்தடிப்பீங்க. உங்கள மாதிரி ஆளுங்க கிட்ட உத்தமி பட்டம் வாங்கணும்னு நான் ஒன்னும் பரிதவிக்கல. இந்த ஸ்டாக், அந்த தர்மா அது இதுன்னு எந்த ‘wing’ ஆ இருந்தாலும், எங்க பாத்தாலும், பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகும் மக்கள் தான். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கிடைக்காது.
அது தான் உண்மை. இது தான் நம்ம ரேப் கலாசாரம், முதல்ல இந்த அரசியல் கட்சில இருக்குற உறுப்பினர் அனைவருக்கும் POSH Training எடுக்கணும். எந்த அரசியல் கட்சிலயாவது ICC இருக்கா? என சின்மயி பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு மற்றொருவர், ICC எல்லாம் இருக்கு. பாலியல் ரீதியா சீண்டுன ஒருத்தனை ஏன் கல்யாணத்துக்கு கூப்பிட்டு அவ்ளோ சந்தோசமா குதிச்சிட்டே ஆசீர்வாதம் வாங்குனீங்கன்னு தான் அவர் கேக்குறாரு.
அதை தவிர மீதி எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கீங்க என கேள்வி எழுப்ப, அதற்கு சின்மயி, ஆனாலும் இதுவரை 20 பெண்கள் குற்றம் சட்டுனவருக்கு விளக்கு பிடிக்குற உங்க பிறவி இருக்கே. அங்க நீக்குறீங்க நீங்களும் உங்கள மாதிரி மாமாஸும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி வருகின்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார் பின்னனி பாடகி சின்மயி.