நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று கடைசியாக வெளியான அண்ணாத்தே திரைப்படம் வெற்றிக்கு பின் அடுத்த ரஜினி தான் நடிக்கும் திரைப்படத்துக்கு கதை கேட்டு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீப காலமாக அடிக்கடி இசையமைப்பாளர் இளையராஜாவை, அவரது ஸ்டுடியோவில் சந்தித்து அதிக நேரம் அவருடன் செலவு செய்து வருகின்றார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின் போது இருவரும் மனம் விட்டு பேசி கொள்கின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான வீரா படம் தான் ரஜினி நடித்த படத்தில் கடைசியாக இளையராஜா இசையமைத்த படம். இதன் பின்பு சுமார் 28 ஆண்டுகள் ரஜினி நடித்த படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இளையராஜாவுக்கு அமையவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் தாங்கள் தான் சாமி இசையமைக்க வேண்டும் என இளையராஜாவை வலியுறுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.
இதற்கு இளையராஜா சில கண்டிசன் போட்டுள்ளார், அதில் பாவலர் கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து வந்த இளையராஜா, இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், கடந்த 30 ஆண்டுகளாக படம் தயாரிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்க முடிவு செய்துள்ள இளையராஜா. தான் மீண்டும் படம் தயாரிக்க இருப்பதை ரஜினியிடம் தெரிவித்துள்ளார் இளையராஜா.
இதற்காக தான் இசையமைக்கும் ரஜினிகாந்த் படத்தை தானே தயாரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என இளையராஜா போட்ட கண்டிஷனுக்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும், பின் தனது படத்தில் இளையராஜா இசைமைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் ஒரு வழியாக ஒப்பு கொண்ட ரஜினிகாந்த். படத்தின் இயக்குனர் பற்றி கேட்ட போது அதற்கு இளையராஜா தனது ஆஸ்தான இயக்குனரான பல்கியை சிபாரிசு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரஜினியை சந்தித்து கதை சொல்லியுள்ளார் பால்கி, கதையும் ரஜினிக்கு பிடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படம் பான் இந்தியா படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் இளையராஜா இசையில் அவரின் சொந்த தயாரிப்பில் பால்கி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஒரு திரைப்படம் தயாராக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.