ராஜையா(இளையராஜா) என்கிற இளைஞன் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் உதவியாளராக பணியாற்றில், ஹார்மனிய பெட்டியை தூக்கி கொண்டு பல கச்சேரிகளில் தனது இசையால் ரசிகர்களை வசியம் செய்து கொண்டிருந்த கால கட்டம் அது. தயாரிப்பாளரரும் கதை ஆசிரியரியருமான பஞ்சு அருணாச்சலம் தனது புதிய படமான அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக ராஜையா என்கிற இளைஞனை அறிமுகம் செய்ய முடிவு செய்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு பஞ்சு அருணாச்சலம் அவர்களிடம் சென்றது, இந்த பையனுக்கு என்ன தெரியும்.? எதற்கு உங்களுக்கு இந்த விபரீத விளையாட்டு என பலர் தெரிவிக்க. பலருடைய எதிர்ப்பையும் மீறி, “அன்னக்கிளி” படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் வழங்கினார்.படப்பிடிப்பு தொடங்கியது முதல் தொடர்ந்து இளையராஜா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.
படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, ரீரிக்கார்டிங் நடந்தபோது, இளையராஜாவுக்கு ரீரிகார்டிங் தெரியவில்லை. படத்தைக் கெடுக்கிறார் என்று சிலர் கூறிவந்துள்ளனர்.அதே சமயம் பஞ்சு அருணாசலத்தின் தம்பி லட்சுமணன், ஸ்டூடியோவுக்கு வந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம், இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பற்றி குறை கூறியிருக்கிறார் என பஞ்சு அருணாச்சலம் கேட்க, அதற்கு எம்.எஸ்.வி, அந்தப் பையனை எனக்குத் தெரியும். என் ரெக்கார்டிங்கில் வாசித்து இருக்கிறான்.
மேலும் அவனை தொந்தரவு செய்யாமல் அவனை விட்டு விடுங்கள். படத்துக்கு என்ன வேண்டுமோ அது வந்துவிடும் என பஞ்சு அருணாச்சலத்துக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார் எம்.எஸ்.வி. மேலும் பஞ்சு அருணாசலத்துக்கும், டைரக்டர் தேவராஜக்கும் இளையராஜாவின் ரீரிக்கார்டிங் மிகவும் பிடித்து போக, இளையராஜா பற்றி குறை சொன்னவர்களிடம் உங்கள் வேலையைப் பாருங்க, இனிமேல் இளையராஜா பற்றி குறை சொன்னால் அவ்வளவு தான் என கண்டிப்புடன் சொல்லி அவர்களை வெளுத்து வாங்கி விரட்டியுள்ளார் பஞ்சு அருணாசலம்.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்து “அன்னக்கிளி” டைட்டிலில் உன்ன பெயரை பெயரை எப்படிப் போடுவது என பஞ்சு அருணாச்சலம் மற்றும் இளையராஜா இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர், உன் பெயர் ராஜா. ஏற்கனவே, சினிமாவில் ஏ.எம்.ராஜா இருக்கிறார். பின்னணி பாடுவதுடன், சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். அவர் பெரிய ராஜா. நீ இளையராஜா, உன் பெயரை இளையராஜா என்று வைத்துவிடுவோம்’ என இளையராஜாவுக்கு பெயர் சூட்டினர் பஞ்சு அருணாச்சலம்.
இதனை தொடர்ந்து இளையராஜா இசை அமைத்த முதல் படம் “அன்னக்கிளி” மகத்தான வெற்றி, அந்த படத்தில் இடம்பெற்ற அன்னக்கிளி ஒன்னைத்தேடுது”, “மச்சானைப் பார்த்தீங்களா”, “நம்ம வீட்டுக் கல்யாணம்” முதலான பாட்டுகள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன. எல்லாப் பாடல்களும் `ஹிட்’ இளையராஜா இசை அமைத்த “அன்னக்கிளி” மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.
படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, “படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசை அமைப்பாளர் பாடல்களுக்கு போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன” என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின.இதனை தொடர்ந்து படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பஞ்சு அருணாச்சலம், அருகில் இருந்த இளையராஜாவை பார்த்து.
உன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்க போகிறவர்கள் இந்த பத்திரிக்கையாளர்கள் தான், இவர்களிடம் காலில் விழுந்து ஆசி வாங்கு என பஞ்சு அருணாச்சலம் சொன்ன அடுத்த நிமிடமே சற்றும் யோசிக்காமல் பத்திரிகையாளர் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் இளையராஜா, சுமார் 45 வருடத்துக்கு முன் நடந்த இந்த சம்பவத்தை சமீபத்தில் சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.