சுயநலத்துடன் செயல்படுகிறாரா ருத்ரதாண்டவம் இயக்குனர்.? இந்துக்களை இழிவு செய்தால் பரவாயில்லையா.? என்ன சார் நீங்களுமா இப்படி.?

0
Follow on Google News

ஜெய்பீம் படத்தில் குருமூர்த்தி பெயரில் வரும் கொடூரமான காவல் ஆய்வாளரை வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போன்று சித்தரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை வெடித்தது. உண்மையில் அந்தோனிசாமி என்கிற தலித் சமூகத்தை சேர்ந்த கிருஸ்துவரை படத்தில் குருமூர்த்தி என பெயர் மாற்றம் செய்து அவர் வரும் காட்சிகளில் வன்னியர்களின் குறியீடான அக்னி சட்டி புகைப்படத்தை காண்பித்து அவரை வன்னியராக ஜெய்பீம் படம் சித்தரிக்க முயற்சி செய்துள்ளது.

இதற்கு தமிழக முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, அணைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து வன்னிய சமூகத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பி, ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த அக்னி சட்டி புகைப்படத்தை மாற்றிவிட்டு ஒட்டு மொத்த இந்துக்களையும் தவறாக சித்தரிக்கும் வகையில் இந்துக்கள் வழிபடும் பெண் தெய்வமான லக்ஷ்மி படத்தை தற்போது இடம்பெற செய்துள்ளது ஜெய் பீம் படக்குழுவினர்.

இந்நிலையில் அந்தோணிசாமி என்கிற கிருஸ்துவரை குருமூர்த்தி என பெயரிட்டு அவர் இந்து என்பது சித்தரிப்பது மட்டும் எப்படி சரியாகும் என மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்த செயலுக்கு பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர், இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சியை மாற்றிவிட்டு மேலும் சர்ச்சையாக்கியுள்ள ஜெய்பீம் படத்தின் இயக்குனருக்கு நன்றி தெரிவித்து ருத்ரதாண்டவம் இயக்குனர் மோகன் ஜி பதிவு செய்துள்ளது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மதத்தை இழிவு செய்தால் கூட பரவாயில்லை, ஆனால் அதில் இருந்து தான் சார்ந்த சமூகம் தப்பித்தால் போதும் என சுயநலத்துடன் செயல்படுவது போன்று உள்ளது மோகன் ஜி நன்றி தெரிவித்த பதிவு என பலர் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில். வலைதளவாசி ஒருவர், அது என்ன சார் இந்து கடவுள் போட்டோ. நிஜத்தில் அந்த கேரக்டர் யாரோ அந்த கடவுளை போடவேண்டியது தானே. நீங்களும் அக்னி கலசம் மாறிய உடனே நன்றி தெரிவிக்கிறீர்கள் என மோகன் ஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு மோகன் ஜி, சார்.. கேள்வி கேட்டா பதில் வரும் சார்.. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு காட்சி மாற்றம் நடந்தது இல்லை. அதற்குதான் நன்றி.. இப்ப இந்து கடவுள் படம் வைத்தது பொது பிரச்சினை.. இப்பவும் ஒன்னா நின்னு கேள்வி கேட்டா மாறும்.. இப்பவாவது வாய திறந்து பேச சொல்லுங்க சார் இந்து மக்களை. என இந்து கடவுள் வைத்தது பொது பிரச்சனை என்றும் இந்து மக்களை கேள்வி கேட்க சொல்லுங்க என்கிற தோரணையில் பதிலளித்துள்ளது.

தனது சமூகத்துக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருந்தால் போதும், ஆனால் தனது சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றது, இந்துக்களாக ஒன்றிணைத்து குரல் கொடுத்த அவர் சமூகம் உட்பட மற்ற அணைத்து சமூகமும் இந்துக்கள் தான் என்பதை உணர்ந்து ஜெய்பீம் இயக்குனருக்கு நன்றி சொன்னது தவறு என இயக்குனர் மோகன் ஜி உணர வேண்டும் என பலர் அறிவுரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.