கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியிருந்த ‘தி பேமிலி மேன்” என்கிற வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் வெளியான போதே இந்த தொடரில் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வந்தனர்.
அப்போது இயக்குனர் பாரதிராஜா தி ஃபேமிலி மேன் 2 ஒளிபரப்பை நிறுத்த வேண்டுமென அமேசான் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு, அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த, போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும், தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும், தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள். தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்.
எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன். என பாரதிராஜா அப்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அமேசான் நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் பாரதிராஜா நடித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் என அமேசானுக்கு எதிராக குரல் கொடுத்து விட்டு இந்த ஆண்டு அமேசான் விளம்பரப் படத்தில் நடித்திருப்பது எந்த வகையில் நியாயம் என்றும், யோவ் பாரதிராஜா.. எதுக்குய்யா இந்த மானங்கெட்ட பொழப்பு, இப்படியெல்லாம் நீ காசு சம்பாரிக்க வேண்டுமா என நெட்டிசன்கள் வருத்து எடுத்து வருவது குறிப்பிட தக்கது.