இயக்குனர், நடிகர், என பல துறைகளில் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியவர் நடிகர் பாக்யராஜ், இந்தியா சினிமாவில் தலை சிறந்த திரைக்கதை வசனம் எழுதக்கூடியவர் பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, சிவப்பு ரோஜா போன்ற வெற்றி படங்களில் வேலை செய்தவர், பின் இயக்குனராக, நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்து முன்னனி இயக்குனராக உச்சத்தை தொட்டவர் பாக்யராஜ்.
இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், இந்த தம்பதியருக்கு சரண்யா என்கிற மகளும், சந்தனு என்கிற மகனும் உள்ளனர். 2006ம் ஆண்டு தனது இயக்கத்தில் பாரிஜாதம் படத்தில் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக தனது மகள் சரண்யாவை ஹிரோயினாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் பாக்யராஜ். இந்த படத்திற்கு பின்பு தொடர்ந்து ஹிரோயினாக சரண்யா நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அடுத்து எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்கவில்லை.
இந்நிலையில் சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்துள்ளார். அடிக்கடி ஆஸ்திரேலியா சென்று தனது காதலை வளர்த்து வந்துள்ளார் சரண்யா. உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார் சரண்யா. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்தவர் காதல் தோல்விக்குபின் வீட்டிலேயே முடங்கினார்.
காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர முடியமால் தவித்து வந்த சரண்யா, இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர் வீட்டில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரை காப்பாற்றி விட்டனர். இந்த காதல் தோல்விக்கு பின்னர் உலகத்தை வெறுத்த சரண்யா, பழைய நினைவுகளை மறக்க அவர் குடுப்பதினார் அமெரிக்காவில் பட்ட படிப்பு படிக்க அவரை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட பாக்கியராஜ்- பூர்ணிமா தம்பதியினரிடம் தனக்கு திருமணம் வேண்டாம் என திட்டவட்டமாக சரண்யா மறுத்துவிட்டார். அவர்களும் மகளை கட்டாய படுத்த விரும்பவில்லை. இதனை தொடர்ந்து தற்போது 36 வயதாகும் மகள் சரண்யா திருமணம் வேண்டாம் என பிடிவாதமாக இருப்பதை நினைத்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அவளுக்கென ஒரு வாழ்கை வேண்டாமா.? என தங்கள் வேதனையை பாக்கியராஜ்- பூர்ணிமா தம்பதியினர் பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது.