நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமாகி ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து சில படங்கள் நடித்து வந்திருந்தாலும் அவருக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கொடுத்த படம் பூவே உனக்காக, அதன் பின்பு விஜய் நடித்த சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் அவர் நடித்த காதலுக்கு மரியாதை , துள்ளாத மனமும் துள்ளும், குஷி போன்ற படங்கள் வெற்றியை கொடுத்து நடிகர் விஜயை அடுத்தடுத்து கட்டங்களுக்கு அழைத்து சென்றது.
இதன் தொடர்ச்சியாக இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் , திரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது, இந்த படத்துக்கு பின் மாஸ் நடிகராக தமிழ் சினிமாவில் இடம் பிடித்தார் விஜய். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் நடிப்பு மற்றும் விஜய்- திரிஷா ஜோடிகளின் காட்சிகளை பார்த்தவர்களுக்கு இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல வேலை செய்திருக்கிறது என பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 2005ம் ஆண்டு இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தது விஜய் – திரிஷா ஜோடி, இந்த படமும் வெற்றி படமாக அமைய விஜய் -திரிஷா ஜோடி சென்டிமெண்டாக வெற்றி ஜோடி என பரவலாக பேசப்பட்டது, அதன் பின் விஜய் – திரிஷா ஜோடியின் நட்பு ஆழமானது, அந்த நட்பின் வெளிப்பாடாக அடுத்து பேரரசு இயக்கத்தில் வெளியான ஆதி திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனரிடம் விஜய் கேட்டுக்கொண்டதாக அப்போது கூற பட்டது.
இதனை தொடர்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் – திரிஷா ஜோடி கேரவனுக்குள் நீண்ட நேரம் தனியாக இருப்பது கேரவனை விட்டு வெளியில் வரும்போது இருவரும் கையை பிடித்து கொண்டு ஜோடியாக வருவது என இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மிக பெரிய அளவில் வேலை செய்ய தொடங்கியது, அப்போது இவர்கள் பற்றிய கிசு கிசு வெளியானதும் குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் வெற்றி ஜோடி என வர்ணிக்கப்பட்ட விஜய் -திரிஷா ஜோடி நடித்த ஆதி படம் படு தோல்வி அடைந்தது.
ஆனால் மீண்டும் அடுத்து தரணி இயக்கத்தில் குருவி படத்தில் விஜய் சிபாரிசில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா, இந்த படத்தின் வெளிநாடு படப்பிடிப்பின் போது விஜய் – திரிஷா ஜோடியை பற்றிய சில ரகசிய தகவல் விஜய் மனைவி சங்கீதா கவனத்துக்கு சென்றுள்ளது, இதனை தொடர்ந்து விஜய் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது விஜய் – திரிஷா கெமிஸ்ட்ரி, இந்நிலையில் இனிமேல் திரிஷா உடன் சேர்ந்து நடிக்க கூடாது என கணவன் விஜய்க்கு சங்கீதா கண்டிஷன் போட்டதாகவும் அதன் பின்பு தான் விஜய்- திரிஷா ஜோடி திரைப்படங்களில் இணையவில்லை என கூறப்பட்டது.