எப்படி அமித்ஷாவை சந்திக்கலாம்… கடுப்பான வெற்றிமாறன்.. ஜி வி பிரகாஷை என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வரிசையில் நம்பர் ஒன்றாக இருக்கும் அனிருத்துக்கு அடுத்த வரிசையில் ஜிவி பிரகாஷ் இருந்து வருகிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக பல படங்கள் நடித்தாலும் கூட, அவருடைய இசை காண வரவேற்பு மக்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கையில் அந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் 11 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதே போன்று சுதா கொங்கார இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் ஜி வி பிரகாஷ் இசையமைக்க இருப்பதால், அந்தப் படத்தின் ஆடியோ ரைட் சுமார் 15 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு படத்தின் ஆடியோ விற்பனையில் 50 சதவீதம் அந்த படத்தின் இசை அமைப்பாளருக்கு ராயலட்டி கொடுக்க வேண்டும் என்பதால், இந்த இரண்டு படங்களில் மட்டுமே ஜி வி பிரகாஷ்க்கு பல கோடி கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்று சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை குறித்து கருத்துக்கள் கேட்பதற்காக சினிமா துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷையும் அமித்ஷா சந்தித்து பேசினார்.

அப்போது ஜிவி பிரகாஷ் அமித்ஷாவிடம் ஆக்கபூர்வமான பல கருத்துக்களை துணிச்சலுடன் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமித்ஷா அவருடைய பேச்சுக்களால் கவர்ந்து பாராட்டு தெரிவித்தவர், டெல்லி வந்தால் உடனே கண்டிப்பா என் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் ஜி வி ப்ரகாஷுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே நாளில் அமித்ஷா மனதில் இடம் பிடித்த ஜி வி பிரகாஷ்க்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த அமித்ஷா .சினிமா துறை சார்ந்த ஒரு வாரியத்தை உருவாக்கி அதில் முக்கிய பதவி ஜிவி பிரகாசுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் அடிப்படையில் தன்னுடைய சினிமா பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அவருடைய சித்தாந்தத்துக்கு எதிராக கருதக்கூடிய பாஜக உடன் ஜிவி பிரகாஷ் நெருக்கம் காட்டி வருவது வெற்றிமாறனை செம்ம டென்ஷன் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருந்த நிலையில், தற்போது வாடிவாசல் படத்திலிருந்து ஜிவி பிரகாஷை வெளியேற்றும் முடிவுக்கு வெற்றிமாறன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் அமித்ஷாவை ஜிவி பிரகாஷ் சந்தித்ததை வெற்றிமாறனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும், மேலும் மத்தியில் பாஜக தயவில் ஜி வி பிரகாஷுக்கு அரசு சார்ந்த முக்கிய பதவி கொடுக்க இருப்பதாக வரும் தகவல் வெற்றிமாறனை மேலும் வாயித்தெரிச்சலை ஏற்படுத்தியத்தின் விளைவு தான், வாடி வாசல் படத்தில் இருந்து ஜிவி பிரகாஷை வெளியேற்றும் முடிவுக்கு வெற்றி மாறன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.