தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் சங்கர் தற்பொழுது சோதனை கட்டத்தில் இருக்கிறார். ஜெண்டில்மேன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சங்கர், முதல் படமே பிரமாண்ட வெற்றியை கொடுத்து, அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், எந்திரன் என பிரமாண்ட படைப்பினால் தமிழ் சினிமாவை உலக அரங்கில் தலை நிமிர செய்தவர்.
தொடர்ந்து பிரம்மாண்டமான வெற்றி படங்களை கொடுத்து வந்த சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு படத்தினால் சங்கருக்கு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து, அடுத்து ஷங்கர் இயக்கத்தில் படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை.
இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை தொடங்கினார் சங்கர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பல்வேறு பிரச்சனைகளால் இந்த படம் பாதியிலேயே நிற்கிறது. இந்நிலையில் தொடர்ந்து தெலுங்கு நடிகர்கள் நடிக்கும் பேன் படங்கள் மிக பெரிய லெவலுக்கு ஹிட் அடித்து வருவதை அறிந்த சங்கர் தனது ரூட்டை மாற்றினார்.
தமிழ் சினிமாவை மட்டும் இனி நம்பி இருந்தால், இனி நாம் வெற்றி பெற முடியாது, மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால், தெலுங்கு திரையுலகம் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பினார் சங்கர். சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடித்த ராம் சரணை வைத்து தற்பொழுது சங்கர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார.
சங்கரை சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல கூடிய படமாக இந்த படம் கருதப்படுகிறது. இதனால் மீண்டும் தன்னுடைய இடத்தை சினிமாவை தக்க வைக்க வேண்டும் என்றால், தற்பொழுது புதியதாக இயக்கி வரும் படம் வெற்றி படமாக அமையவேண்டும் என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் ஷங்கர். அதனால் ராம்சாரணை வைத்து ஒவ்வொரு கட்சியையும் மக்கள் ரசிக்கும் படி எடுத்து வருகிறார் சங்கர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் தான் சோதனையும் வேதனையும் சந்தித்து வந்த சங்கர், தற்போது தெலுங்கு சினிமாவிலும் சந்திக்க தொடங்கியுள்ளார். ஹைதராபாத் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சசங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது. ஆனால் அந்த பள்ளியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறைஇடம் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி, பள்ளி நடந்து கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா என இயக்குனர் ஷங்கர் உட்பட என்பதால் உடனே படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டவர். இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அனுமதி பெற்றுவிட்டோம், படப்பிடிப்பை நிறுத்தமுடியாது என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பட குழுவினரிடம், உங்க இயக்குனர் படத்தில் மட்டும் தான் சமூக அக்கறையை வெளிக்காட்டுவாரா.? இங்கே படப்பிடிப்பு நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவது தெரியாதா.? என சரமாரியாக கேள்வி கேட்டவர். இங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதித்த சம்பந்தப்பட்ட அமைச்சரை கண்டித்த அந்த பெண் அதிகாரி. உடனே இயக்குனர் சங்கர் உட்பட பட குழுவினரை அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றினார்.
இந்நிலையில் ஷங்கரின் புதிய படப்பிடிப்பு பாதியிலே நின்றது. இதனை தொடர்ந்து பள்ளி போன்று செட் அமைத்து படம் எடுப்பதா.? அல்லது வேறு ஒரு பள்ளியில் இந்த படப்பிடிப்பை நடத்துவதாக என ஷங்கர் உட்பட படக்குழுவினர் திட்டமிட்டுவருகின்றனர். அதே நேரத்தில் ஷங்கர் உட்பட படக்குழுவினரிடம் அதிரடி கட்டிய பெண் அதிகாரியை பொது மக்கள் பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.