இயக்குனர் லிங்குசாமி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்து வந்தவர், கடந்த 2015 ஆம் ஆண்டு எண்ணி ஏழு நாட்கள் என்கின்ற படத்திற்காக பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடம் ரூபாய் 1.30 கோடி கடன் வாங்கி இருந்தார் லிங்குசாமி. ஆனால் எண்ணி ஏழு நாட்கள் படம் கைவிடப்பட்டும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் அடுத்தடுத்து படங்களை எடுத்து வந்தார் லிங்குசாமி.
இதனால் பிவிபி கேபிட்டல்ஸ் நிறுவனம் தொடர்ந்து லிங்குசாமியுடன் கடனை திருப்பி கேட்ட நிலையில், லிங்குசாமி தரப்பில் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை, வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக தெரிவித்த லிங்குசாமி, அதற்கான காசோலையையும் கொடுத்துவார்.
ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாமல் லிங்குசாமி கொடுத்த காசோலை திரும்பி வந்தது. இதற்கு காரணம் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியர் படத்திற்கு 8 கோடி அவருக்கு சம்பளம் பேசப்பட்டது, ஆனால் அவர் 4 கோடி மட்டும் பெற்று கொண்டு தமிழக தியேட்டர் உரிமையை பெற்றுள்ளார். இது அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அந்த படத்திற்கு வாங்கிய சம்பளம் 4 கோடி ரூபாயும் பறிபோனது.
இதனால் தான், லிங்குசாமி கொடுத்த காசோலைக்கு குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனம் லிங்குசாமி மீது மோசடி வழக்கு பதிவு செய்த நிலையில், இதை விசாரித்த நீதிமன்றம் லிங்குசாமிக்கு ஆறுமாத சிறை தண்டனையை அளித்துள்ளது. லிங்குசாமி வாங்கிய கடனை திருப்பித் தராமல் மிகப்பெரிய சிரமத்திற்கு காரணம் அவருடைய நிர்வாக திறமையின்மை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சினிமா துறையினரை அதிகம் நேசிக்கக்கூடிய லிங்குசாமி, அனைவரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர், ஒரு காலகட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி படங்களை கொடுத்து பொருளாதாரத்தில் செழிப்பாக இருந்த லிங்குசாமி பலருக்கு உதவி செய்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் சங்கர் சில பிரச்சனைகள் காரணமாக மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். அவரால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் செலுத்த முடியவில்லை.
இதை அறிந்த லிங்குசாமி சங்கரை சந்தித்து அவருடைய பிரச்சினையை கேட்டு அறிந்து, உடனே சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் தன்னுடைய சொந்த செலவில் கோவாவிற்கு சுற்றுலா அழைத்துச் சென்ற லிங்குசாமி. அங்கே தனியாக ஒரு கப்பல் புக் செய்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் கவலைகளை மறக்கடித்து சுமார் மூன்று நாட்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியவர் லிங்குசாமி.
இது போன்று சக சினிமா துறையைச் சார்ந்தவர்கள் துக்கம், மகிழ்ச்சி என அனைத்திலும் பங்கேற்றுக் கொண்ட லிங்குசாமி, தற்பொழுது கடன் சுமையால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளதை அறிந்து அவருக்கு உதவி கரம் நீட்ட முன் வருவார்களா அவருடன் நெருங்கி பழகிய சினிமா துறையினர் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.