சீண்டிய மணிரத்தினம்.. ஒரு கை பார்த்து விடுகிறேன் ..மீண்டும் களத்தில் இறங்கிய பாரதிராஜா..!

0
Follow on Google News

கிராமிய கதையை மையப்படுத்தி கிராமத்து மண் வாசனைகளை திரைப்படம் மூலம் அணைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இயக்குனர் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, அடுத்தடுத்து பெரும்பாலும் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கிராமிய மண் வாசனை கலந்த ஒரு படமாக இருந்து வந்தது.

பாரதிராஜா தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக அப்போது இருந்த இயக்குனர் கே.பாலச்சந்தருக்கே பெரும் சவாலாக விளங்கியவர் பாரதிராஜா. அதே காலகட்டத்தில் ஒரு வளர்ந்து வரும் இயக்குனராக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தன்னுடைய வித்தியாசமான படைப்புகளால் பல வெற்றி படங்களை கொடுத்து வந்திருந்தவர் இயக்குனர் மணிரத்தினம்.

கிராமத்து மண் வாசனைகளை மையப்படுத்திய பாரதிராஜா இயக்கத்தில் கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருது அளவுக்கு சென்றாலும், பாரதிராஜாவின் சினிமா வளர்ச்சி என்பது தமிழ் சினிமாவுக்குள் அடங்கி விட்டது. ஆனால் மணிரத்தினம் அடுத்தடுத்து இந்தி படங்களில் எண்ட்ரி கொடுத்து இந்திய அளவில் மிக பெரிய இயக்குனராக வலம் வந்தார் பாரதிராஜா.

பாரதிராஜா மற்றும் மணிரத்தினம் இருவரும் சமகாலத்தில் கடும் போட்டியாளராகவும் பல வெற்றி படங்களை மாற்றி மாற்றி கொடுத்து வந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு பாரதிராஜா மற்றும் மணிரத்தினம் ஆகிய இருவருமே அவர்கள் இயக்கத்தில் வெளியான படங்கள் தோல்வியை சந்தித்து இதன் பின்பு இனி இவர்களுடைய சினிமாவில் காலம் முடிந்து விட்டது என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அவர்களின் படத்திற்கு வரவேற்பு இல்லாமல் போனது.

இந்த நிலையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து, காலம் கடந்து வயதான காலத்தில் கூட இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தன்னால் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டிய மணிரத்தினம், தன்னுடைய சினிமா வாழ்க்கையை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் இயக்கத் தொடங்கி விட்டார்.

இந்த சம்பவத்தை பார்த்து இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்ட பின்பு தான் சினிமாவில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்கின்ற முடிவில் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதிய படம் இயக்கும் முயற்சியில் களத்தில் இறங்கியுள்ள பாரதிராஜா தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு உதவியாக இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் உதவியுடன் புதிய படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மகளின் இசைக்கு பின்னால் இருந்து இளையராஜா பெருமளவில் உதவி செய்யவும் தயாராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வயதானாலும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று, ஒரு வெற்றி படத்தை கொடுத்துவிட்டு தான் நான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடிவு செய்வேன் என்று மீண்டும் களத்தில் இறங்கியுள்ள பாரதிராஜாவின் முயற்சி வெற்றி பெறுமா.? என்பதை அவர் இயக்கத்தில் வெளியாகும் படம் வெளியான பின்பு தான் தெரியவரும்.