ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. முதல் படமே குடும்பங்கள் கொண்டாடும் வகையில் கமர்சியல் ஹிட் கொடுத்து பெரும் அளவில் பேசப்பட்டவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் அடுத்து வெளியான ரன், பையா, சண்டக்கோழி போன்ற படங்கள் தொடர்ந்து நல்ல வெற்றியை கொடுத்து வந்த நிலையில், ஒரு சில படங்கள் மட்டும் தோல்வியை சந்தித்தது.
2004ம் ஆண்டு சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கிய லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்கிற பெயரில் அவருடைய சகோதரர் உடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆரம்பத்தில் லிங்குசாமி தயாரிப்பில் வெளியான தீபாவளி, பையா, கும்கி, சதுரங்க வேட்டை போன்ற பல படங்கள் வெற்றியை கொடுத்து நல்ல லாபத்தையும் பெற்று தந்தது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் அவருடைய சொந்த தயாரிப்பில் சூர்யா , சமந்தா நடிப்பில் வெளியான படம் அஞ்சான். படத்தில் நடித்த நடிகை சமந்தாவுடன் கிசுகிசுவில் சிக்கினார் லிங்குசாமி. இதனை தொடர்ந்து சமந்தா மீது கொண்ட மயக்கத்தில் அஞ்சான் படத்தில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டத்தில் விளைவாக, அஞ்சான் படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது.
மேலும் மீண்டும் தான் சொந்த தயாரிப்பில் இயக்க இருக்கும் படத்திற்கு நடிகை சமந்தாவுக்கு வாய்ப்பு கொடுத்து, தன் அருகில் வைத்து கொள்ள முடிவு செய்த லிங்குசாமி. ஏற்கனவே நடிகர் கார்த்திகை வைத்து பையா படம் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த லிங்குசாமி. அஞ்சான் படத்தை முடித்துவிட்டு கார்த்திக் மற்றும் சமந்தா நடிப்பில் எண்ணி ஏழு நாட்கள் என்கின்ற ப்ராஜெக்ட்டை தொடங்கினார்.
எண்ணி ஏழு நாட்கள் படத்திற்காக பி வி பி கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனத்திடம், ரூபாய் 1.30 கோடி கடன் பெற்றிருந்தார் லிங்குசாமி. ஆனால், திடீரென எண்ணி ஏழு நாட்கள் படம் கைவிடப்பட்டு, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல், அடுத்தடுத்து படங்களை எடுத்து வந்தார் லிங்குசாமி. இதனை தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து லிங்குசாமி 1.30 கோடி பணத்திற்கான காசோலையை அந்த நிறுவனத்திற்கு வழங்கினார்.
ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாமல், அந்த காசோலை திரும்பி வந்தது . இதை தொடர்ந்து லிங்குசாமி மீது பாதிக்கப்பட்ட நிறுவனம் மோசடி வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவர் சகோதரருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்த நிலையில் சமந்தாவுக்காக எண்ணி ஏழு நாட்கள் படத்தை தொடங்கி அதற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், சிறைக்கு செல்ல இருக்கின்றார் லிங்குசாமி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.