திருட்டுத்தனம் செய்து சிக்கிய அட்லீ… இந்தியில் இருந்து துரதியடிக்கப்படுகிறார் அட்லீ.. என்ன செய்து மாட்டினார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரமாண்ட இயக்குனர் சங்கர் உதவி இயக்குனராக இருந்து வந்தவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த அட்லீ முதல் படத்தில் மிக பெரிய வெற்றியை கொடுத்து தனக்கான முத்திரையை பதித்தார். இதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார் அட்லீ, அதன் பின்பு மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு அமைத்தது.

இந்நிலையில் முதல் படம் ராஜா ராணி குறைந்த செலவில் கட்சிதமாக எடுத்து கொடுத்த அட்லீ, அடுத்து அவர் இயக்கிய தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பதால், அதிக செலவு இல்லாமல் படம் லாபம் அடையும் வகையில் எடுத்து கொடுத்தார் அட்லீ, அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான மெர்சல் மற்றும் பிகில் படங்களில் தனது சேட்டைகளை காட்ட தொடங்கியுள்ளார் அட்லீ என பல போர்ஜரி வேலைகளை அட்லீ செய்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

மெர்சல் மற்றும் பிகில் படத்தை மிக சுருக்கமாக எடுத்திருக்கலாம், ஆனால் செட் போடுவது, அதிகம் அவுட் டூர் ஷூட்டிங், அதிக துணை நடிகர்களை பயன்படுத்துவது, குரூப் டான்சர்கள் அதிகம் நபர்களை பயன்படுத்துவது என தயாரிப்பாளருக்கு செலவுகளை அதிகப்படுத்தியுள்ளார் அட்லீ, இதற்கு காரணம் செட் அமைக்கும் காண்ட்ராக்டர், துணை நடிகர்களை அழைத்து வரும் கான்ட்ராக்டர்கள், என இவர்களிடம் இருந்து இயக்குனர் அட்லீ கமிஷன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு அதிகமாக கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக பிரமாண்டம் என்கிற பெயரில் தயாரிப்பாளருக்கு தேவையற்ற செலவுகளை அதிகப்படுத்தியுள்ளார் அட்லீ. இது அவரை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு அட்லீ செய்யும் துரோகம் என கூறப்படும் நிலையில், இயக்குனர் சங்கர் இது போன்று செய்வதாக பிரபல தயாரிப்பாளர் ஏற்கனவே குற்றசாட்டுகளை வைத்த நிலையில் அதே பார்முலாவை கையாண்டு வருகிறார் அட்லீ என கூறப்படுகிறது.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான மெர்சல் பட தயாரிப்பாளருக்கு சுமார் 25 கோடி வரை நஷ்டம் என்றும், அதே போல் பிகில் பட தயாரிப்பாளருக்கு சுமார் 30 கோடி வரை நஷ்டம் என கூறப்படும் நிலையில், தற்போது ஹிந்தியில் படம் இயக்க மும்பையில் தங்கியுள்ளார் அட்லீ, படப்பிடிப்புக்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார், இந்த படத்தில் ஷாருகான் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழில் செய்த அதே போர்ஜரி வேலையை கமிஷன் அடைப்படையில் தயாரிப்பு நிறுவனத்துக்கு தொடர்பில்லாத செட் அமைக்கும் கட்ராக்டர்களிடம் பேரம் பேசியுள்ளார் அட்லீ, இவர்கள் தான் நான் என்ன நினைக்கிறேனோ அதை அப்படியே செட் போட்டு தருவார்கள் என அட்லீ தெரிவிக்க, மேலும் அதிக அவுட் டூர் ஷூட்டிங், துணை நடிகர்கள் , குரூப் டான்சர்கள் அதிக நபர்கள் படத்துக்கு தேவை என்பதையும் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் அட்லீ என கூறப்படும் நிலையில்.

அட்லீ கமிஷனுக்கு ஆசை பட்டு இது போன்று செயல்பட இருக்கிறார் என்பதை கண்டறிந்த தயாரிப்பு நிறுவனம், இதையெல்லாம் ஏமார்ந்த தமிழ் தயாரிப்பாளர்கள் யாராவது இருப்பார்கள் அங்கே உன் சேட்டையை காட்டு என கடுமையாக எச்சரித்த தயாரிப்பு நிறுவனம், படத்தின் கதைக்கு எது தேவை, தேவையில்லை என்பது கூட தெரியாமல் நாங்கள் பட தயாரிக்கவில்லை, என்ன தேவையோ அதை எங்களிடம் தெரிவிக்கவும்.

இதன் பின்பு அது படத்தின் கதைக்கு தேவை என்றால் நாங்கள் உறுதியா செய்து தருகிறோம் என திட்டவட்டமாக தயாரிப்பு நிறுவனம் அட்லீயிடம் தெரிவித்துள்ளது. ஹிந்தி திரையுலகில் இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு துரோகம் செய்யும் இது போன்ற இயக்குனர்கள் விரட்டப்பட வேண்டும் என ஹிந்தி சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், அட்லீ இயக்கும் தற்போதை ஹிந்தி படம் தான் ஹிந்தியில் முதல் படமும் கடைசி படமாகவும் அவருக்கு இருக்கும் என கூறப்படுகிறது.

விஷாலை நம்பி மோசம் போன சிவகுமார் குடும்பம்.! ஒட்டு மொத்த குடும்ப கௌரவமும் போச்சு.. ஏன் தெரியுமா.?