மீண்டும் தேவர் மகன் சர்ச்சை… மாரிசெல்வராஜுக்கு ஆதரவாக அமீர் ஏற்படுத்திய பரபரப்பு..

0
Follow on Google News

மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மத்தியில் இருந்து மாரி செல்வராஜுக்கு எதிர்ப்பும் கிளம்பியது, இப்படி பல்வேரு சர்ச்சைகளுக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றாலும், கூட OTT யில் வெளியாகி பட்டைய கிளப்பியது.

OTTயில் மாமன்னன் வெளியாகி பட்டைய கிளப்ப முக்கிய காரணமாக இருந்தது, அந்த படத்தில் இடம்பெற்ற ரத்தினவேல் கதாபாத்திரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கொண்டாடியது தான், அந்த படத்திற்கு விளம்பரமாக அமைத்தது. இந்நிலையில் சமீப காலமாக மாரிசெல்வராஜுக்கு எதிராக சிலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமீர். இயக்குனர் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் தான் சாதி சண்டைக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நாங்குநேரி சம்பவம் தான். ஜாதி வெறியால் மாணவன் ஒருவர் வெட்டப்படட்ட சம்பவம் தமிழ் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனைக் குறித்தும் இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் நாங்குநேரி சம்பவம் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. ஆனால் இது எல்லாம் நிரந்தர தீர்வாக இருக்காது. சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், “ஒரு சினிமா படம் எடுத்துவிட்டால் சாதி ஒழிஞ்சு விடுமா என்ற கேள்வி எல்லோரிடத்திலும் இருக்கு. ஒரு பெயரை நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.

மாரி செல்வராஜ், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து பேசும் போது, அதில் வருகிற இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் எடுப்பதற்கு காரணம் என சொன்னார். அதே போல தான் இந்த இசக்கி கார்வண்ணன்குள்ளேயும் ஒரு இசக்கி இருக்கிறார். தென் மாவட்டத்தை சார்ந்த இசக்கி ராஜா என்பவர். அவர் யூட்யூபில் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் ரொம்ப தரக்குறைவான வார்த்தைகளால் கடும் சொற்களால் சினிமா காரர்களை திட்டினார்.

இறுதியாக ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற ஆட்கள் படம் எடுத்து தான் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் அண்ணன் தம்பியாக தான் பழகி வருகிறோம் என்று முடிக்கிறார்.” என்று ஒரு யூடியூப் வீடியோவை குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு சினிமாக்காரன் தான் நாட்டை நாசமாக்கியதாக சொன்னால், ஒரு வேலை அதிகாரத்தில் இருந்தவர்களை வைத்து இவர் சொல்லியிருப்பார் என நினைத்து கொள்ளலாம்.

ஆனால் இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தான் தெரிகிறது, ஏன் தேவர் மகன், சின்ன கவுண்டர் வரும் போது வரவில்லை. அப்போதெல்லாம் நீங்க சொல்லியிருக்க வேண்டும். உங்களால் தான் சாதி சண்டை வருகிறதென்று, ஏன் கேட்கவில்லை என இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அமீர், “மாரி செல்வராஜ், ரஞ்சித் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதை அவர்கள் ஆபத்தாக உணர்கிறார்கள். அதனால் அந்த வார்த்தைகள் வருகிறது. அது தான் இங்க பிரச்சனை. மாரி செல்வராஜ் அவருடைய எந்த படத்திலும் யாரையும் சண்டைக்கு கூப்பிடவில்லை. என்னை ஏன் இப்படி நடத்துறீங்க அப்படினு கேட்கிறார். அந்த கேள்வி தான் ரொம்ப முக்கியமானது. அந்த அடிப்படையில்தான் இந்த படமும் பேசும் என்று நினைக்கிறேன்” என அமீர் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.