சர்ச்சை இயக்குனர் மோகன் ஜி சுயரூபம் வெளிப்பட்டது… கதறும் மூச்சு முட்ட முட்டு கொடுத்த சங்கிகள்..

0
Follow on Google News

பழைய வண்ணாரப்பேட்டை என்கிற படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான முதல் படம் வந்ததும் தெரியாது, போனது தெரியாது, அந்த அளவுக்கு அந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை, இதன் பின்பு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் திரௌபதி. இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை சீண்டுவது போன்று இடம் பெற்று இருந்த வசனம், மற்றும் காட்சிகள் சர்ச்சையாக வெடித்தது.

இந்த சர்ச்சைக்கு எதிராக ஒரு தரப்பினரும், ஆதரவாக மற்றொறு தரப்பினரும் கருத்துக்கு தெரிவிக்க, அது திரௌபதி படத்திற்கு விளம்பரமாக அமைத்தது, இந்த விவகாரத்தில் சமூக வலைதள சங்கிகள் மூச்சு முட்ட இயக்குனர் மோகன் ஜி க்கு முட்டு கொடுத்து, அவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தை விளம்பரம் செய்து வந்தனர். இந்த படம் ஒரு தொலைக்காட்சி நாடகம் போன்று இருந்தாலும் கூட, சர்ச்சையின் காரணமாக திரௌபதி படத்தின் மூலம் இயக்குனர் மோகன் ஜி பிரபலமாக அறியப்பட்டார், இதற்கு முக்கிய காரணம் அவருக்கு முட்டு கொடுத்த சமூக வலைதள சங்கிகளும் தான்.

அடுத்தடுத்து மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்த கெளதம் வாசுதேன் மேனன், செல்வராகவன் ஆகியோரின் நடிப்பை குறிப்பிட்டு சினிமா துறையை சேர்ந்த முன்னனி நடிகர்கள் பாராட்டினாலும் கூட, அந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி பெயரை குறிப்பிட்டு பாராட்டுவதை தவிர்த்து வருகிறார்கள். இதற்கு காரணம் அந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களால் தான் அந்த படம் உயிரோட்டதுடன் உள்ளது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்து காட்சிகள் இடப்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்த போது, கடும் எதிர்ப்புக்கு பின் அந்த சர்ச்சைக்குரிய காலெண்டர் புகைப்படம் நீக்கப்பட்டு இந்துக்கள் வழிபடும் பெண் தெய்வமான லக்ஷ்மி படத்தை இடம்பெற செய்தது ஜெய்பீம் பட குழு, இது இந்துக்களை சித்தரிக்கும் செயல் என இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ஏற்கனவே இருந்த சர்ச்சைக்குரிய காலெண்டர் புகைப்படத்தை மாற்றிவிட்டு லக்ஷ்மி புகைபடத்தை மாற்றிய சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய்பீம் இயக்குனருக்கு நன்றி தெரிவித்து மோகன் ஜி பதிவு செய்திருந்தார்.இந்து மதத்தை இழிவு செய்தால் கூட பரவாயில்லை, ஆனால் அதில் இருந்து தான் சார்ந்த சமூகம் தப்பித்தால் போதும் என சுயநலத்துடன் செயல்படுவதாக மோகன் ஜிக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய போது.

இயக்குனர் மோகன் ஜி, இந்து கடவுள் படம் வைத்தது பொது பிரச்சினை.. இந்து மக்களை வாய் திறந்து பேச சொல்லுங்க சார் என இந்த பிரச்சனையில் நான் எதற்கு தலையிட வேண்டும் என்கிற தோரணையில் பதிலளித்திருந்தது. மோகன் ஜி யின் சுயரூபம் அப்போதே வெளிப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் வீரமுருகன் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள கிடுகு படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, திரையில் வெளியிட முடியாமல் ஒரு யு ட்யூப்ல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்து சங்கிகளுக்கு ஆதரவான கிடுகு படத்திற்கு ஆதரவாக இது வரை வாய் திறக்காத இயக்குனர் மோகன் ஜி, யு ட்யூபில் வெளியாகியுள்ள கிடுகு படத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருவது, தனக்கு திரௌபதி படத்தின் போது வந்த பிரச்சனைக்கு ஆதரவாக முட்டு கொடுத்த சங்கிகளின் தயவு இனி நமக்கு தேவையில்லை என்கிற எண்ணத்தில் தான் சங்கிகளுக்கு ஆதரவான கிடுகு படத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் கண்டு கொள்ளாமல், ஒரு காலத்தில் மூச்சு முட்ட முட்டு கொடுத்த சங்கிகளுக்கு தற்பொழுது விபூதி அடித்துள்ளார் மோகன் ஜி என கூறப்படுகிறது.