தமிழ் சினிமாவில் நகைசுவை என்றால், அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான் என இருந்த காலத்தில் நடிகர் வடிவேலு சினிமாவில் என்ட்ரி ஆனார், சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மிக பெரிய உச்சத்தை அடைந்தார் வடிவேலு, ஒரு கட்டத்தில் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று பேசாமல் ஒரு நாள் கால் சீட்க்கு இவ்வளவு என சம்பளம் பேசி வாங்கும் அளவுக்கு பிசியான நகைச்சுவை நடிகரானார் வடிவேலு.
இந்நிலையில் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருந்த வடிவேலு, நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு எதிராக மிக கடுமையாக பேசி வந்த வடிவேலு. 2011 சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்துக்கு எதிராக திமுக உடன் இணைந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்தை மிக கடுமையாக பேசினார் ஒரு கட்டத்தில் வடிவேலு மீது செருப்பு கூட வீசப்பட்டது.
இதன் பின்பு 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்பு திமுகவுக்கு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் வடிவேலு பட வாய்ப்புகள் இல்லாமல் காணமல் போனார் என்றே சொல்லும் அளவுக்கு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார், மேலும் வடிவேலு சினிமாவில் நடிப்பதற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் உதவியை நாட முயற்சி செய்தார் வடிவேலு.
திமுகவை சேர்ந்த பூச்சி முருகனை சந்தித்து தனது பிரச்னையை வடிவேலு எடுத்து தெரிவித்து, முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு வடிவேலு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து முக ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் வடிவேலு, அப்போது கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதும், மேலும் தற்போது தனக்கு சினிமாவில் நடிக்க ரெட் கார்ட் போட பட்டது பற்றியும் வடிவேலு பேசியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு 2011 தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் தான் எனக்கு இந்த நிலைமை என முதல்வர் முக ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு வடிவேலு கதறி அழுததாக கூறபடுகிறது. இதனை தொடர்ந்து உதயநிதி தலையிட்டு வடிவேலு பிரச்சனையை தீர்த்து வைத்ததாக கூறபடுகிறது. இதனை தொடர்ந்து சினிமாவில் வடிவேலு நடிப்பதற்கான ரெட் கார்ட் தடை நீக்கப்பட்டதாக கூறபடுகிறது.
மேலும் ரெட் கார்ட் தடை நீக்கப்பட்ட பின்பு லைக்கா நிறுவன தயாரிப்பில் ஐந்து படங்களில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இதில் ஒரு படத்தில் உதயநிதி நடிப்பதால் அவருடன் இணைந்து ஒரு படத்தில் வடிவேலு நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது நாய் சேகர் என்ற படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார், பல வருடங்கள் கழித்து சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலுவை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பது பற்றி அடுத்தடுத்து வடிவேலு நடிப்பில் வெளியாகும் படங்களை வைத்து தான் முடிவு செய்ய முடியும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.