வாம்மா… மின்னல்’ என்ற வசனத்தால் தமிழக மக்களை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தவர் நடிகர் பாவா லட்சுமணன். பெரும்பாலும் நடிகர் வடிவேலு காமெடிகளில் துணைநடிகராக வலம் வந்த இவர் தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் தவிப்பது காண்போரின் கண்களை கலங்க வைத்துள்ளது.
நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் திரைஉலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீரிழிவு நோயினால் சில ஆண்டுகளாகவே இவர் எந்த படங்களிலும் நடிப்பது இல்லை. அதோடு கடுமையான பொருளாதார நெருக்கடியினாலும் பாவா லக்ஷ்மண் வாடிக் கொண்டு இருந்தார்.
பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தனக்கு சர்க்கரை நோய் முற்றிப்போனதால் கடந்த பத்து நாட்களாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாகவும், டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டு பாதிப்பு அதிகமாகிவிட்டது என்று கட்டைவிரலை எடுத்து விட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக வருத்தத்துடன் கூறியிருத்தார். மேலும் தனக்கு கால் விரல் போன வருத்தத்தை விட சினிமா வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததை நினைத்து தான் வருத்தம் என கண் கலங்கி பேசி இருந்தார்.
தற்போது பாவா லெட்சுமணன் ஒரு சிறிய வாடகை வீட்டில் தன்னை கவனிக்க யாரும் இல்லாமல் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். நடிகர் என்றால் நிறைய சம்பளம் கிடைக்கும் என பலரும் கூறுவார்கள், ஆனால் பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாதி கூட துணை நடிகர்களுக்கு கிடைப்பதில்லை. பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் பட வாய்ப்பை போல் துணை நடிகர்களுக்கும் எந்த வாய்ப்பும் கிடைக்காது.
அப்படி கிடைக்கும் வாய்ப்பில் துணை நடிகர்கள் வாங்கும் பணத்தை வைத்து சென்னையில் வாழ்க்கை ஓட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் பாவா லட்சுமணன் கூறுகையில், சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது தனியார் மருத்துவமனை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது எனவும் அதனால்தான் அரசு மருத்துவமனையில் வந்து சேர்ந்ததாகவும் டிஸ்சார்ஜ் ஆன பிறகும் மருந்து, மாத்திரைகள், சாப்பாடு செலவு என்று ஏகப்பட்ட செலவிருக்கிறது என கலங்கி பேசியிருந்தார்.
மேலும் தங்களை போன்ற நலிவடைந்த கலைஞர்களுக்கு திரைத்துறையினர் தான் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்திருந்தார். சமீபத்தில் கூட பிரபல காமெடி நடிகர் வெண்கல ராவ் தனது ஒரு கை, ஒரு கால் செயலிலந்து நடக்க கூட முடியாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல கூட பணம் இல்லை என அழுது குமுறி இருந்தார்.
மேலும் நடிகர்கள், சங்கங்ம் தனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று உருக்கமாக திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறு சமீப காலமாகவே பல்வேறு துணை நடிகர்கள் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் கஷ்டப்படுவதாக வீடியோக்கள் வெளியிட்டு உதவி கேட்டு கெஞ்சும் சம்பவங்களும் நடந்து வருகிறது.