அடப்பாவிகளா.. கொஞ்சம் கூட இறங்கமில்லையா.. பாவம்யா மாரிசெல்வராஜ்…

0
Follow on Google News

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை சொல்ல கூடிய, விளிம்பு நிலை மக்களின் கதை எடுத்து வாழ்வியல் ரீதியாக படம் எடுக்க கூடிய இயக்குனர் மாரி செல்வராஜ் என்கிற பிம்பத்துடன், அவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், மற்றும் கர்ணன் போன்ற படங்கள் மிக பெறிய வெற்றியை அவருக்கு பெற்று தந்தது, அதே போன்று ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் குரலாக மாமன்னன் ஒலிக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில்,

மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாவில் இயக்குனர் மாரிசெல்வராஜ் பேச்சு அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில் இருந்து எதிர்ப்பாக மாறியது. மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய மாரி செல்வராஜ், மாமன்னன்’ படம் உருவானதற்கு காரணமே ‘தேவர் மகன்’ படம்தான். அப்படத்தை பார்த்த நாளிலிருந்து தான் ‘மாமன்னன்’ உருவானது.

’தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால் கடக்கமுடியவில்லை. சினிமாவாக பார்த்த ஒரு படம் சமூகத்தை எப்படி புரட்டிப் போடுகிறது? என்னவெல்லாம் செய்கிறது? அது சரியா? தவறா? என்றெல்லாம் உழன்று கொண்டிருந்தேன். இன்று ‘தேவர் மகன்’ என்பது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக். எல்லா இயக்குநர்களுமே அப்படத்தைப் பார்த்து விட்டுத்தான் படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான். ஆனால் ‘தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம்.

அன்றைய காலகட்டத்தில் நடந்தவை எல்லாம் அப்படித்தான் ரத்தமும், சதையுமாக இருந்தன. இதை எப்படி புரிந்துகொள்வது? இந்தப் படம் சரியா? தவறா? என்று புரியாமல் அப்படி ஒரு வலி. இந்த ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’ என மாரிசெல்வராஜ் பேசி சர்ச்சை பேச்சுக்கு பின்பு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் இருந்து கடும் எதிப்பு அவருடைய பேச்சுக்கு எதிராக கிளம்பி அதுவே மாமன்னன் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மாமன்னன் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஜாதிவெறி பிடித்த வில்லனாக காட்டப்பட்ட பஹத் பாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை தற்போது ஹீரோவாக சித்தரித்து வரும் பதிவுகள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தலைவலியையும் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடும் வகையில் அவரை தங்கள் ஜாதி என குறிப்பிட்டு பலரும் பதிவிடுவது தற்போது அதிகரித்து இருக்கிறது.

சேலத்தின் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் சாதி வெறி பிடித்த மிருகம் போல மாரி செல்வராஜ் படத்தில் காட்டியிருந்த நிலையில், பகத் ஃபாசிலின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் அந்த படத்தின் ஹீரோவே பகத் ஃபாசில் தான் என்றும் மாமன்னன் பகத் ஃபாசில் என ஏகப்பட்ட சாதிய பெயர்களுடன் வீடியோ எடிட்களையும் பேனர்களையும் அடிக்க ஆரம்பித்து விட்டனர். ரத்தினவேல் போல இருக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்கு மாரிசெல்வராஜ் எடுத்த படம் தற்பொழுது ரத்தினவேலுவின் ரசிகர்களாக பலரை உருவாக்கி வைத்துள்ளதை பார்க்க முடிகிறது.

மாரிசெல்வராஜ் சர்சைக்குரிய வகையில் பேசிய தேவர்மகன் படத்தின் பெயரிலேயே சாதியின் பெயரை வைத்து இருப்பார்கள். ஆனால், இங்கே ரத்தினவேல் எந்த சாதி என்பதை மாரி செல்வராஜ் குறிப்பிடாமல் விட்டதால், அவர் எங்க சாதி தான் என பெரும்பாலான சாதியினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் மாரிசெல்வராஜ் உருவாக்கிய கொடூரமான சாதி வெறி பிடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் எங்கள் சாதி இல்லை என்று செல்வதற்கு பதில் இவர் எங்க சாதி தான் என பலரும் கொண்டாடி வருவது மாரிசெல்வராஜ் படைப்பு மிக பெரிய கேலி கூத்தாகி உள்ளது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.