ஆசை யாரை விட்டது.? ராஜ்கிரணை நடு ரோட்டில் நிற்க வைத்த வனிதா விஜயகுமார் ..அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்த நடிகர் ராஜ்கிரண் அவர் தயாரித்த படங்கள் தொடர்ந்து வெற்றியை அவருக்கு பெற்று தந்தது, இயக்குனர் கஸ்துரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கிரண் அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இதன் பின்பு ராஜ்கிரண் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அவருடைய சொந்த தயாரிப்பில் அவரே இயக்கி நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் போன்ற படைகளை அவரே இயக்கி நடித்து வந்தார், இந்த படங்கள் ராஜ்கிரண் சொந்த தயாரிப்பில் உருவானது என்பதால் அவருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது, இந்நிலையில் உச்சத்தில் இருந்த ராஜ்கிரண் 1996ம் ஆண்டு வெளியான மாணிக்கம் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் உடன் இணைந்து நடித்த போது இருவர் பற்றி அப்போது கிசு கிசுக்கள் பரவியது.

மாணிக்கம் படத்தில் வனிதா நடித்த பின்பு அவருடைய வீட்டில் அவருக்கும் அவருடைய பெற்றோர்களுக்கு பெரும் பிரட்சனை ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி அவருடைய குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார் வனிதா விஜயகுமார், இந்த பிரச்சனைக்கு காரணம் ராஜ்கிரண் உடன் வனிதாவுக்கு உள்ள கிசு கிசு தான் என அப்போது செய்திகள் வெளியானது, இதனை தொடர்ந்து மாணிக்கம் படத்துக்கு பின் ராஜ்கிரண் பெரும்பாலும் தயாரிக்கவில்லை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் அடுத்த குறுகிய காலத்தில் ராஜ்கிரண் கடனாளியாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக செய்திகள் வெளியான நிலையில், குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் மீண்டும் அவருடைய பெற்றோர்களுடன் இணைத்தார், இந்நிலையில் ராஜ்கிரண் தயாரித்த படங்கள் எதுவும் அவருக்கு நட்டத்தை கொடுக்காத நிலையில் அவர் கடனாளியாக நடுரோட்டில் வனிதா விஜயகுமார் நிற்க வைத்துவிட்டு சென்றுவிட்டார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் கடும் நெருக்கடியில் இருந்த ராஜ்கிரணை அவரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டு அப்போது உச்சத்தில் இருந்த நடிகர் வடிவேலு பொருளாதார ரீதியில் அவருக்கு உதவி செய்து கடும் பண கஷ்ட்டத்தில் இருந்த ராஜ்கிரணை மீட்டு எடுத்தார் என கூறப்பட்டது. இதன் பின்பு குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய ராஜ்கிரண் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.