ஐஸ்வர்யா – சிம்பு காதல் ஜோடி இடையே புகுந்த திரிஷா.! சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தட்டி தூக்கிய தனுஷ்.!

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்தே நடிகர் சிலம்பரசனை காதலித்து வருவதாக அப்போது செய்திகள் தொடர்ந்து வெளியானது, சிலம்பரசன் கதநாயனாக அவருடைய தந்தை இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது கூட சிம்பு – ஐஸ்வர்யா ஜோடி காதலித்து வந்ததாக அப்போது கூறப்பட்டது, குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வந்த சிலம்பரசன் கதநாயகனாக நடித்த முதல் படம் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து அடுத்தடுத்து கதநாயகனாக நடித்து வந்த சிலம்பரசன் அவ்வப்போது ஆஸ்திரேலியாவில் பட்ட படிப்புக்காக சென்ற காதலி ஐஸ்வர்யாவை பார்க்க பறப்பது போன்ற கிசு கிசு செய்திகள் வெளியானது, இப்படி உலகம் முளுவதும் பறந்து காதலை வளர்த்து வந்த எந்த ஜோடி, சிம்பு அலை படத்தில் நடித்த போது சிறு சிறு சண்டைகள் ஏற்பட தொடங்கியது, அலை படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த திரிஷா உடன் வெளியில் பொது இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வந்தார் சிம்பு.

இதை அறிந்த ஐஸ்வர்யா பலமுறை சிம்புவை கண்டித்ததாக கூறப்படுகிறது, ஆனால் அலை படப்பிடிப்பு முடிந்து சிம்பு அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிய பின்பும் கூட திரிஷா உடன் ஜோடியாக சுற்றி வந்துள்ளார். இதனால் சிம்பு – ஐஸ்வர்யா ஜோடி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடும் சண்டை வெடித்துள்ளது, இதனை தொடர்ந்து சிம்புவுடனான காதலுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு அவரை விட்டு ஐஸ்வர்யா பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அக்காவின் தோழியான ஐஸ்வர்யா சிம்புவுடனான காதல் பிரிவுக்கு பின் தனுஷ் உடன் பழக தொடங்கினர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட தனுஷ், காதல் பிரிவில் இருந்த ஐஸ்வர்யாவை காதலிக்க தொடங்கினர், அந்த கால கட்டத்தில் தொடர்ந்து சிம்பு நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வந்தது, அதே வேலையில் தனுஷ் நடித்த முதல் மூன்று படங்கள் மிக பெரிய வெற்றி அடைந்து சிம்புவுக்கு போட்டியாக வளர்ந்து வந்தார் தனுஷ்.

இதனை தொடர்ந்து தன்னை விட வயதில் மூத்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா, இதன் பின்பு தனது காதல் தோல்வியை வெளிப்படுத்தும் விதத்தில் ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்வது போன்று கதை அமைத்து மன்மதன் என்கிற படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் சிம்பு, இந்த படம் தொடங்கத்தில் சிம்பு தன்னை ஒரு பெண் காதலித்து ஏமாற்றிவிட்டு சென்று விட்டதாக பேசுவது போன்ற காட்சி ஐஸ்வர்யாவை தான் மேற்கோள் காட்டுகிறார் என அப்போது பெரும் சர்ச்சை வெடித்தது.