மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை திரிஷா, இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படத்திற்கு பின்பு தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தவர் நடிகை திரிஷ.
இந்த நிலையில் ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகை நயன்தாரா ரீ-என்ட்ரி கொடுத்த பின்பு திரிஷாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. அதே நேரத்தில் நயன்தாராவின் மார்க்கெட் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்தே கொண்டு, மேலும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் டாப் ஒன் நடிகையாக வலம் வந்தார் நயன்தாரா.
அதேபோன்று தன்னுடைய மொத்த மார்க்கெட்டையும் இழந்து பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கினார் நடிகை திரிஷா. இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தால். திருமணத்திற்கு பின்பு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிடும், அதனால் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ஒரு ரவுண்ட் வரலாம் என்று திட்டமிட்டார் திரிஷா.
நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தை முடிந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தில் விஜய் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சிபாரிசில் இடம் பிடித்துள்ளார் நடிகை திரிஷா. மேலும் விரைவில் திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் திரிஷா.
அதே நேரத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நயன்தாராவுக்கு பதில் இனி தனக்கு தான் வாய்ப்பு வரும் என்று நம்பிக்கொண்டிருந்த திரிஷா கனவில் மண்ணை அள்ளி போடும் வகையில், தற்பொழுது புதியதாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நயன்தாராவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி வருகிறார்.
இதனால் தனது சம்பளத்தை பல மடங்கு அதிகரித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இருந்தும் எந்த ஒரு இயக்குனரும் திரிஷாவை கண்டு கொள்ளவில்லை. இதனால் நயன்தாரா இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கனவில் மிதந்து திரிஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மேலும் விரைவில் திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் வரவேற்பு எப்படி என்பதை பொறுத்துதான் திரிஷாவின் சினிமா எதிர்காலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.