எல்லாமே வியாபாரம் தான்… கேரளாவுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் தமிழ் சினிமா நடிகர்.. ஆனால் தமிழ்நாட்டுக்கு.?

0
Follow on Google News

இயற்கை அழகு கொஞ்சும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால், அப்பகுதியே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகியுள்ளது. இதுவரை நிலச்சரிவினால் அங்கு 316 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மீட்புப்பணிகளில் மீட்பு படையினர் 4வது நாளாக ஈடுபட்டுள்ளனர். மேலும் முண்டக்கை பகுதியில் தெர்மல் ஸ்கேனரை கொண்டும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கேரளா பகுதியே சின்னாப்பின்னமாகியுள்ளதால் நிதியுதவி அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் தமிழ்திரைப்பட நடிகர்கள் பலர், லட்ச லட்சமாக நிதியுதவி அளித்துள்ளது பெரும் பேசுபடு பொருளாகியுள்ளது. இந்நிலையில் முதல் ஆளாக ஓடி வந்து, நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகிய மூன்று பேரும் குடும்பத்தோடு சேர்ந்து, ரூபாய் 50 லட்சத்தை நிதியுதவியாக அளித்திருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து நடிகர் விக்ரமும் ரூபாய் 20 லட்சத்தை நிதி உதவியாக வழங்கியிருக்கிறார். மேலும் நடிகை ராஸ்மிகா மந்தனா ரூபாய் 10 லட்சமும், மலையாள சினிமாவின் டாப் ஜோடியான பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் சேர்ந்து 25 லட்சம் ரூபாயையும் நிவாரண நிதியாக வழங்கியிருக்கின்றனர்.

மேலும் இவர்களோடு மட்டுமல்லாமல், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் ரூபாய் 25 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி இருக்கிறார். அதோடு இவர், பருவநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கை பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டதால், இதன் தாக்கத்தை புரிந்து கொண்டு நாம் அனைவருமே கூட்டாக செயலாற்ற வேண்டியது மிக அவசியம் எனவும் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதேபோல் மலையாள நடிகையாக இருந்து தற்போது தமிழில் டாப் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும், நடிகை நிகிலா விமலு ம் நிவாரண பொருட்களை பேக் செய்து, வயநாட்டிற்கு நிவாரண உதவிகளை அனுப்பியிருக்கிறார். இப்படி பல நடிகர், நடிகைகள் கேரளாவிற்கு உதவி செய்து வந்தாலும், தற்போது இதனால் பல விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.

குறிப்பாக கேரளாவிற்கு நிதி உதவி செய்த அனைத்து நடிகர்களுக்கும், அங்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது, இந்த மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் இந்த நிதி உதவி நாடகம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் நடிகர் சூர்யா, தமிழ்நாட்டில் நடக்கும் எந்தவித அசம்பாவிதங்களுக்குமே குரல் கொடுக்க மாட்டார். குறிப்பாக அவரை டேக் செய்து பல பேர் விமர்சித்த பிறகு தான் அந்த நிகழ்வைப் பற்றி பேசுவார்.

அதேபோல் தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையே தலைகீழாக மாறியது. அப்போது கூட நடிகர் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து வெறும் 10 லட்ச ரூபாய்தான் நிவாரண நிதியாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தான் தமிழகத்திற்கு கிள்ளி கொடுத்துவிட்டு, கேரளாவிற்கு அள்ளி கொடுத்திருக்கிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதோடு இதற்குப் பின்னணி காரணமே சூர்யா, ஜோதிகாவிற்கு எல்லாம் கேரளாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால்தான், கேரளாவிற்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதை போல் தான் நடிகர் கமல்ஹாசனும் மிக்ஜாம் புயலுக்கு ஒத்த பைசா கூட தமிழகத்திற்கு கொடுக்கவில்லை. ஆனால் கேரளாவிற்கு தற்போது முதல் ஆளாக ஓடி வந்து 25 லட்சம் ரூபாயை நிதி உதவியாக அளித்திருக்கிறார்.

இதற்கு காரணமும் கமலுக்கும் கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதால்தான், இங்கு தனது மார்க்கெட்டை தக்க வைக்க இந்த நிதி உதவி நாடகம் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் சிலர், இது அவர்களின் சுயநலத்திற்காக செய்து கொள்ளும் விளம்பரம் என்றாலும், இதனால் சில பேர் பயனடைவதால், இவர்களின் இந்த உதவியை பாராட்டியும் வருகின்றனர்.