வட்டி தொழில் செய்து வரும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பற்றிய பரபரப்பு செய்தி தான் கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்று வருகிறது. மேலும் யார் இந்த அன்பு செழியன் இவரின் பின்னணி என்ன என்கின்ற தகவல்களும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. அன்புச்செழியனுக்கு பொதுவாக இரண்டு முகங்கள் உண்டு என்பதை அவரிடம் பணம் வாங்கியவர்கள் அறிவார்கள்.
அன்புசெழியனிடம் வாங்கிய பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து நியாயமாக நடந்து கொண்டார்கள் என்றால், அவர்களுக்கு மேலும் பண உதவி செய்து தொடர்ந்து அவர்களுடன் தொழில் ரீதியான உறவை தொடர்வார். அதே நேரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என்றால், அப்போது தான் அன்புச் செழியனின் இன்னொரு முகம் வெளிப்படும் என்கின்றனர்.
ஆரம்ப கட்டங்களில் அன்புச் செழியன் தற்பொழுது உள்ள நடைமுறை போன்று இல்லாமல், மிகக் கடுமையாக கடன் கொடுத்தவர்களிடம் நடந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஷால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்கள் தயாரித்து வந்த நிலையில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்று படம் தயாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விஷால் நடித்த மருது படத்துக்காக சுமார் 21.29 கோடி பணம் அன்புச்செழியனிடம் கடனாக பெற்று அந்தப் படத்தை எடுத்துள்ளார் விஷால். படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று விஷாலுக்கு லாபத்தை பெற்று தந்தது. இருந்தும் குறிப்பிட்ட தேதிக்குள் அன்புசெழியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விஷால் திருப்பி கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.
அன்புச்செழியன் தரப்பிலிருந்து நடிகர் விஷாலுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது, அப்பொழுது நான் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேலும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கின்றேன் என தெரிவித்த விஷால், என்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல் நீங்கள் சினிமாவில் பைனான்ஸ் செய்ய முடியாது என திமிராக பேசிய விஷால், நான் உங்க பணத்தை நிச்சயம் திருப்பி தருகிறேன், எனக்கு கால அவகாசம் தாருங்கள் என திமிறி எழுந்துள்ளார் விஷால்.
உடனே தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கடும் நெருக்கடி கொடுத்த அன்பு செழியன், நீ என்ன கால அவகாசம் கேட்பது. நான் கொடுப்பது தான் டைம், அடுத்த இரண்டு நாட்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் என அவருடைய இன்னொரு முகத்தை காட்டியுள்ளார் அன்புசெழியன். இதனை தொடர்ந்து அன்புசெழியன் பிடியில் இருந்து தப்பிக்க லைக்கா நிறுவனத்திடம், தன்னுடைய நிறுவனத்தில் அனைத்து படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்குவதாக உத்தரவாதம் அளித்த விஷால்.
அன்புச் செழியன் இடம் வாங்கிய 21. 29 கோடி ரூபாய் பணத்தை லைக்கா நிறுவனத்திடம் பெற்று அதை அன்புசெழியனிடம் வாங்கிய கடனை அடைத்துள்ளார். இருந்தும் லைக்கா நிறுவனத்திடமும் விஷால் நேர்மையாக நடந்து கொள்ளாமல், லைக்கா தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது குறிப்பிடத்தக்கது.