நடிகர் விஷால் பண விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ள மாட்டார் என்கின்ற குற்றச்சாட்டு பரவலாக சினிமா வட்டாரத்தில் இருந்து இருந்து வருகிறது. மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்கள் மறைவதற்கு முன்பு, நடிகர் விஷால் நடிப்பில் ஒரு படம் இயக்க கால்ஷீட் கேட்டு, அதற்காக விஷாலுக்காக அட்வான்ஸ் தொகை 7 கோடி ரூபாய் தயாரிப்பாளர் பாலு கொடுத்து இருந்தார்.
ஆனால் படம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்றின் காரணமாக பாலு இறந்துவிட்டார்.இதன் பின்பு தயாரிப்பாளர் பாலு அவர்களின் மனைவி கணவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தரும்படி விஷாலிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு பதிலும் விஷாலிடம் இருந்து வரவில்லை. இது போன்று இறந்தவர்கள் பணத்தை கூட இரக்கமில்லாமல் ஏப்பம் விட்டு வருகின்றவர் விஷால்.
இந்நிலையில் மருது படத்தின் போது சினிமா பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தார் விஷால். ஆனால் மருது படம் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றிருந்தாலும் அன்புச்செலியனிடம் வாங்கிய பணத்தை விஷால் திரும்ப கொடுக்கவில்லை. அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை இழுத்தடிப்பு செய்து கொண்டே இருந்தார் விஷால்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அன்பு செழியன் விஷாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்த தொடங்கினார். இதனை தொடர்ந்து விஷால் நெருக்கடியான சுழலில் இருப்பதை அறிந்த பிரபல லைக்கா நிறுவனம் விஷாலுக்கு உதவுவதற்கு முன் வந்தது. அன்புச்செழியனிடம் விஷால் வாங்கிய 21 கோடி ரூபாய் பணத்தை லைக்கா நிறுவனம் திருப்பி கொடுத்து, விஷாலுடன் தொழில் ரீதியாக சில ஒப்பந்தம் செய்தது லைக்கா நிறுவனம்.
ஆனால் லைக்கா நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை விஷால். இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஷாலை கடுமையாக கண்டித்து லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய 21 கோடி கடனை திருப்பி செலுத்த அறிவுறுத்து உள்ளார்.
ஆனால் விஷால் தரப்பில் தனக்கு நிறைய கடன்கள் இருப்பதால் போதிய வருமானம் இல்லாமல் பிறரிடம் வாங்கிய கடனவே தன்னால் கட்ட முடியவில்லை. அதனால் லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய 21 கோடி ரூபாய் கடனை அடைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என விஷால் தரப்பில் தெரிவித்துள்ளார். இதற்கு நீதிபதி விஷாலின் சொத்து கணக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் விஷால் தரப்பில் அவருடைய சொத்து கணக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பட்சத்தில் லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய கடன் தொகைக்கு பதில் விஷாலின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.