மதுரை முனிசாலை வீதியில் சாவு ஊர்வலத்தில் டான்ஸ் ஆடிய வடிவேலு, ராஜ்கிரண் கருணையால் தமிழ் சினிமாவில் நுழைந்து மிக பெரிய உச்சத்தை தொட்டு, பெயர், புகழ், பணம் என சம்பாரித்தாலும் அவருடைய ஆணவத்தின் காரணமாக அவர் உச்சட்டத்துக்கு போன அதே வேகத்தில் சரிந்து விழுந்து. தற்போது மீண்டும் எழுந்திரிக்க முடியாமல் கடந்த பத்து வருடமாக சினிமாவில் எங்கே வடிவேலு என தேடும் அளவுக்கு காணமல் போய் விட்டார் வடிவேலு.
ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தாலும், வடிவேலுக்கு படத்தில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகளை அமைத்து கொடுத்தது நடிகர் விஜயகாந்த், காரணம் இருவரும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வடிவேலு சினிமாவில் உச்சத்துக்கு சென்ற பின்பு தலைக்கனம் உச்சத்துக்கு ஏறி, படத்தின் இயக்குனர்களிடம் படப்பிடிப்பின் போது இது சரியில்லை, அது சரியில்லை என ஆணவத்துடன் நடந்து வந்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் உடன் எங்கள் அண்ணா படத்தில் வடிவேலு நடிக்கும் போது, அந்த படத்தின் இயக்குனருடன் இந்த வசனம் சரியில்லை, இதை இப்படி மற்ற வேண்டும் என அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் நேரடியாக விஜயகாந்திடம் சென்று, வடிவேலு ரெம்ப பிரட்சனை செய்கிறார் என்று கூற, சரி நான் பார்த்து கொள்கிறேன் என இயக்குனரிடம் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு நடிக்கும் காட்சிக்கான படப்பிடிப்பு தொடங்கியது, அப்போது இயக்குனர் சொன்ன வசனத்தை பேசாமல் வடிவேலு தானாக ஒரு வசனத்தை மாற்றி பேசியுள்ளார். அதற்கு இயக்குனர் இந்த வசனம் இல்லை என தெரிவிக்க. அதற்கு வடிவேலு, அந்த வசனம் சரியில்லை அதனால் தான் நானாக இந்த வசனத்தை மாற்றியுள்ளேன் இது தான் சரியாக இருக்கும் என கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் இதற்கு ஒப்பு கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அந்த செய் வடிவேலு என கூற, அதற்கு வடிவேலு இல்லண்ணே அது சரி இருக்காது. இந்த வசனம் தான் சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதற்கு படத்தின் இயக்குனருக்கு தெரியாத.? எது சரி, எது தவறு என்று அப்படியே இருந்தாலும் இயக்குனரிடம் தெரிவிக்காமல் நீயா எப்படி வசனத்தில் மாற்றம் கொண்டு வரலாம், இதெல்லாம் தப்பு வடிவேலு என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆனால் வடிவேலு தொடர்ந்து விஜயகாந்திடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்ய, வடிவேலு கண்ணத்தில் பளார் என அறைந்து , சொல்லிட்டே இருக்கே பிறகு திரும்ப திருப்ப பேசிட்டே இருக்க. ஒழுக்கமா இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய் என விஜயகாந்த் விட்ட பளார்க்கு பின்பு, அடுத்த இரண்டு நாட்களின் மூச்சு விடாமல் படத்தில் நடித்து விட்டு சென்ற வடிவேலு, அதன் பின்பு விஜயகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் கால் சீட் இல்லை என தட்டி கழித்து வந்துள்ளார் வடிவேலு என கூறப்படுகிறது. இந்த தகவலை சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.