ஆட்சிக்கு ஆபத்தாக முடிந்துவிடும்.. உதயநிதிக்கு எதிராக அந்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய்..!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாகவும் மற்றும் தன்னுடைய படத்தின் ஆடியோ நிகழ்ச்சி வாயிலாகவும் மத்திய பாஜக அரசு மற்றும் அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக அரசியல் பஞ்ச் என்கின்ற வகையில் விமர்சனம் செய்து வந்தவர் நடிகர் விஜய். இது திமுகவிற்கு ஆதரவாக அப்போது அமைத்தது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின்போது நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து பைசைக்கிளில் வாக்கு சாவடிக்கு ஒட்டு போட சென்றார், அப்போது மத்திய அரசு பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து தான் நடிகர் விஜய் பைசைக்கிளில் சென்று ஓட்டு போட சென்றார் என்றும், மேலும் அவர் ஒட்டிச் சென்ற பைசைக்கிள் நிறம் கருப்பு சிவப்பு என்பதால் இவருடைய ஆதரவு திமுகவுக்கு தான் என்கின்ற ஒரு தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தின் தமிழ்நாடு தியேட்டரில் உரிமையை சில ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிட்டது, அதேபோன்று பீஸ்ட் படம் வெளியான அதே தேதியில் வெளியான கேஜிஎப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிட்டது. பீஸ்டு படத்தை விட கேஜிஎப் படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பிருந்ததால், பீஸ்ட் ஓடிய பல திரையரங்குகளில் அப்படத்தை தூக்கி விட்டு கேஜிஎப் படத்தை போட வைத்தனர் ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

இதை நடிகர் விஜய் தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். இதனால் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் வாரிசு படத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு தமிழ்நாடு தியேட்டர் விற்பனை செய்யக்கூடாது என்று படத்தின் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார் விஜய். வாரிசு படத்தை வாங்கி வெளியிட பல முயற்சிகள் செய்தும் விஜயின் பிடிவாதத்தினால் அப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு கிடைக்கவில்லை.

இதனால் பொங்கல் என்று வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் துணிவு படமும் வெளியாக இருக்கிறது, துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் பெரும்பாலன திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட்டு விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்திற்கு திரையரங்கு கிடைக்காதபடி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு கிடைக்காத வாரிசு படத்திற்கு பல முட்டுக்கட்டைகளை ரெட் ஜெயன்ட் மூவிஸ் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பொங்கல் அன்று வாரிசு படம் வெளியாகுமா.? என்கின்ற சந்தேகம் எழுந்த நிலையில் . நடிகர் விஜய் பொங்கல் பண்டிகையின் போது அஜித் உடனான போட்டியில் நான் பின்வாங்க மாட்டேன், வாரிசு படத்தை பொங்கல் அன்று வெளியிட்டாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள் தொடரும் பட்சத்தில் நடிகர் விஜய்யின் முக்கியமான அஸ்திரிமான ஆடியோ லான்ச் அரசியல் பஞ்ச் பேசும் அஸ்திரத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

டிசம்பர் மாசம் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் தான் சந்திக்கும் நெருக்கடிகளை மனதில் வைத்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக அரசியல் பன்ச் கொடுப்பர் விஜய் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி விஜய் திமுக அரசுக்கு எதிராக அரசியல் பன்ச் பேசினால், மக்கள் மத்தியில் திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும், மேலும் சினிமா துறையினர் விஜய் பின்னால் அணிவகுக்க வாய்ப்புகள் இருக்கு என கூறப்படுகிறது.

இதனால் வாரிசு பட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கையை பொறுத்து தான் விஜய்யின் ஆடியோ லான்ச் அஸ்திரம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் திமுகவுக்கு ஆதரவாக பாஜக மற்றும் அதிமுகவை அரசியல் பன்ச் என்கிற பெயரில் விமர்சனம் செய்து பல சிக்கலை சந்தித்த விஜய்க்கு தற்பொழுது திமுகவுக்கு எதிராக தன்னுடைய அஸ்திரத்தை எடுக்கும் நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.